Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை விட்டுக் கொடுக்காவிட்டால் எஸ்.தவராசா, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியிலிருந்து (ஈபிடிபி) நீக்கப்படுவார் என்று அந்தக் கட்சியின் செயலாளர் நாயகமும், பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 

எஸ்.தவராசா சுழற்சி முறையில் தவநாதனுக்கு வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்க வேண்டும் என்பது திடீர் என்று முளைத்தது அல்ல. அதனை, கட்சி ஏற்கனவே தீர்மானித்து இருந்தது. அது தன்னுடைய தனிப்பட்ட முடிவும் அல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரித்தானியாவில் இருந்த எஸ்.தவராசாவை வரவழைத்தது ஏன்? இப்போது அவரைப் பதவியில் இருந்து நீக்குவது ஏன்? என்று செய்தி இணையத்தளமொன்று எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே டக்ளஸ் தேவானந்தா மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,  “என்னுடைய அரசியல் முயற்சிகளுக்கு ஒத்தாசையாக இருப்பதற்காக எஸ்.தவராசாவை வரவழைத்தேன். அவரும் அவ்வாறே கட்சியின் கொள்கைகளை முன்னெடுத்தார். ஆனால், இப்போது அவர் எதிர்க்கட்சித் தலைவராக இல்லாமல், வடக்கு மாகாண சபை முதலமைச்சரின் உதவியாளராக செயற்படுகின்றார். அவர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்துகொண்டே, ஜனாதிபதியை முதலமைச்சரின் பிரதிநிதியாகச் சந்தித்து இருக்கின்றார். எஸ்.தவராசா என்னுடைய நீண்டகால நண்பர். ஆனால் அவர் இவ்வாறு நடந்துகொள்வார் என எதிர்பார்க்கவில்லை.” என்றுள்ளார்.

இதனிடையே, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியிலிருந்து செயற்திறன் மிக்க முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.சந்திரகுமார் ஏற்கனவே வெளியேறியுள்ளார். தற்போது மற்றுமொரு செயற்திறன் மிக்க முக்கியஸ்தரான எஸ்.தவராசாவும் வெளியேறுவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டு உள்ளார். இது, கட்சியைப் பாதிக்காத?, என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள டக்ளஸ் தேவானந்தா,

“சந்திரகுமாரும், தவராசாவும் வந்ததால் எங்களுக்கு வாக்குகள் வந்து குவிந்துவிடவில்லை. அவர்கள் வெளியேறினாலும் அது எங்களைப் பாதிக்காது. அவர்கள் பெற்ற வாக்குகள் அவர்களுக்கு விழுந்த வாக்குகள் அல்ல. அது கட்சிக்கு விழுந்த வாக்குகள். கட்சியை மீள்நிர்மாணம் செய்து வருகின்றேன். அடுத்த தேர்தலில் நாங்கள் நான்கு அல்லது ஐந்து ஆசனங்களைப் பெற்றுக்கொள்வோம். புகையிரதப் பயணத்தில் பலரும் ஏறுவார்கள் இறங்குவார்கள். ஆனால் ரெயில் காட் இருக்கும் வரை பயணம் தொடரும்.” என்றுள்ளார்.

0 Responses to பதவியை விட்டுக் கொடுக்காவிட்டால் எஸ்.தவராசா ஈபிடிபியிலிருந்து நீக்கப்படுவார்: டக்ளஸ்

Post a Comment

Followers