Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வடக்கில் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டுவரும் ‘ஆவா’ குழுவினை தான் உருவாக்கவில்லை என்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

‘ஆவா’ குழுவினை இராணுவத் தேவைகளுக்காக நான் பாதுகாப்புச் செயலாளராக இருந்த காலத்தில் உருவாக்கியதாகக் கூறப்படுவதில்லை உண்மையில்லை. அப்படிக் கூறுவது இராணுவத்துக்கு அவமானம் சேர்ப்பதாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இராணுவத்தினர் எந்தவொரு தருணத்திலும்  இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டதில்லை என்று கூறியுள்ள கோத்தபாய ராஜபக்ஷ, அமைச்சர் ராஜித சேனாரத்ன இராணுவத்துக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

‘ஆவா’ குழுவினை முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவே உருவாக்கியதாக  அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான ராஜித சேனாரத்ன நேற்றுமுன்தினம் புதன்கிழமை தெரிவித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

0 Responses to ‘ஆவா’ குழுவை நான் உருவாக்கவில்லை: கோத்த

Post a Comment

Followers