Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி) எந்தவொரு தருணத்திலும் ஆயுதக் குழுவாக செயற்பட்டதில்லை என்று அந்தக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

“ஈழமக்கள் ஜனநாயக கட்சி உட்பட தமிழீழ விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தலை எதிர்நோக்கிய தமிழ் அமைப்புகளுக்கு பாதுகாப்பு வழங்க முடியாத நிலையிலேயே அவர்களது தற்பாதுகாப்பிற்காக கடந்த கால அரசாங்கங்கள் ஆயுதங்களை வழங்கியிருந்தன. அவ்வாயுதங்கள் 2002ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பின்னர் போர் நிறுத்தக் கண்காணிப்பு குழு முன்னிலையில் அரசிடம் மீளவும் ஒப்படைக்கப்பட்டன. நாம் ஒருபோதும் ஆயுதக்குழுவாகச் செயற்பட்டதில்லை.” என்றும் அவர் கூறியுள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே டக்ளஸ் தேவானந்தா மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “இந்திய- இலங்கை ஒப்பந்தத்தின் பின்னர் புலிகள் இயக்கம் உட்பட பல இயக்கங்களுக்கு அன்றைய அரசாங்கம் ஆயுதங்களை வழங்கியிருந்தது. ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட், ரெலோ, ஈரோஸ், மற்றும் ஈ.என்.டி.எல்.எவ் போன்ற இயக்கங்களுக்கு அப்போது ஆயுதங்கள் வழங்கப்பட்டிருந்தன. அவற்றை அவர்கள் வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்தியிருக்கலாம். ஆனால் நாம் ஒருபோதும் ஆயுதக்குழுவாகச் செயற்பட்டதில்லை. ஏனைய தமிழ் இயக்கங்களைப்போல நாம் புலிகள் இயக்கத்தை  தேடி அழிக்கும் முயற்சியிலும் ஈடுபடவில்லை.” என்றுள்ளார்.

0 Responses to ஈ.பி.டி.பி ஒருபோதும் ஆயுதக் குழுவாக செயற்பட்டதில்லை: டக்ளஸ்

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...