Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வடக்கில் தொடரும் அதீத இராணுவ பிரசன்னம் மற்றும் நாளாந்த பொருளாதார நடவடிக்கைகளில் இராணுவத்தின் இடையூறுகளினால் மக்கள் எதிர்கொள்ளும் அன்றாட பிரச்சனைகள் தொடர்பில் பிரித்தானியாவின் இராஜாங்க அமைச்சர் பரோன்ஸ் அனிலேக்கு எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் எடுத்துரைத்துள்ளார்.

இலங்கை வந்துள்ள ஐக்கிய நாடுகள் மற்றும் பொதுநலவாய நாடுகளுக்கான பிரித்தானியாவின் இராஜாங்க அமைச்சர் பரோன்ஸ் அனிலேக்கும், இரா.சம்பந்தனுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று செவ்வாய்க்கிழமை  கொழும்பிலுள்ள பிரித்தானிய உயரிஸ்தானிகரின் இல்லத்தில் இடம்பெற்றது. 

இலங்கையில் தற்போது இடம்பெற்றுவரும் அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் அமைச்சரை தெளிவுபடுத்திய இரா.சம்பந்தன், தேசிய பிரச்சினைக்கான நிரந்தர தீர்வினை அரசியல் யாப்பினூடாக அடைவதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார்.

நல்லிணக்கத்தை நோக்கிய இலங்கையின் பயணத்தில் பிரித்தானியாவின் பங்கும் சர்வதேசத்தின் கண்காணிப்பும் பங்கும் கடந்த காலங்களில் இருந்ததைப் போல தொடர்ச்சியாகவும் இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

இந்த சந்திப்பில் கலந்துகொண்ட கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன், கடந்த காலங்களில் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணைகளின்போது பிரித்தானியா ஆற்றிய பங்களிப்பை வரவேற்றதோடு தொடர்ந்தும் அத்தகைய பங்களிப்பின் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.

அரசியல்யாப்பு உருவாக்கம் மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு பிரித்தானியா தொடர்ந்தும் ஒத்துழைப்பும் ஊக்கமும் கொடுக்கும் என இந்த சந்திப்பில் கலந்துகொண்ட பிரித்தானிய இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

0 Responses to வடக்கில் தொடரும் அதீத இராணுவப் பிரசன்னம்; பிரித்தானிய அமைச்சருக்கு சம்பந்தன் எடுத்துரைப்பு!

Post a Comment

Followers