Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பொதுமக்களுக்காகத் தனது வாழ் நாளை அர்ப்பணித்த ஒரேயொரு அதிபர் வேட்பாளர் ஹிலாரி கிளிங்டன் தான் என அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா தெரிவித்துள்ளார். வடக்கு கரோலினாவில் நேற்று பொது மக்கள் மத்தியில் பேசும் போது தற்போதைய சரியான நேரத்துக்கு சரியான வேட்பாளர் ஹிலாரி தான் என அதிபர் ஒபாமா கூறியுள்ளார்.

மேலும் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டொனால்டு டிரம்ப் தொடர்ந்து வேடிக்கையாகப் பேசி வருவதாகவும் ஒரு மிகப் பெரிய தேசத்தைத் தலைமை தாங்குவதற்கான ஆளுமை அவரிடம் இல்லை எனவும் ஒபாம தெரிவித்தார். மேலும் அமெரிக்கா பொதுமக்களை சித்திரவதை செய்ய வேண்டும் எனவும் எந்த ஒரு மதத்தையும் அங்கு தடை செய்ய வேண்டும் எனவும் தெரிவித்து வரும் ஒரு நபரை நாம் எவ்வாறு அதிபராக்க முடியும் எனவும் ஒபாமா கேள்வி எழுப்பினார்.

இதேவேளை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஹிலாரியின் மின்னஞ்சல் விவகாரம் சூடு பிடித்த பின்னர் ஆங்கில இணையத்தளம் ஒன்று அமெரிக்காவின் 50 மாநிலங்களிலும்  நடத்திய கருத்துக் கணிப்பில் ஹிலாரி கிளிங்டன் 6 புளிகள் முன்னிலையில் உள்ளார்.

0 Responses to பொதுமக்களுக்கா தனது வாழ்க்கையை அர்ப்பணித்த ஒரே வேட்பாளர் ஹிலாரி தான்!: ஒபாமா

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.