Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஐக்கிய இலங்கைக்குள் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு அதில் இனப்பிரச்சினைகளுக்கான நியாயமான தீர்வு முன்வைக்கப்படும் என்று சுற்றுலாத்துறை, கிறிஸ்தவ விவகாரங்கள் மற்றும் காணி அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

வடக்கில் மீண்டும் எந்தவொரு வன்முறையும் உருவாவதற்கு இடமளிக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற வரவு-செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான நான்காம் நாள் விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜோன் அமரதுங்க மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் தெரிவித்துள்ளதாவது, “தற்போதைய தேசிய  அரசாங்கமானது புதிய அரசியலமைப்பை இயற்றி நியாயபூர்வமான முன்னெடுப்புகளை உறுதிசெய்யும். அனைத்து விடயங்களிலும் நாம் நியாயபூர்வமான செயற்பாடுகளையே மேற்கொள்வோம்.

குறிப்பாக ஐக்கிய இலங்கைங்கைக்குள் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் என்பதை உறுதிபடக் கூறுகின்றோம். வடக்கில் காணிகள் மீளவும் கையளிக்கப்பட்டு வருகின்றன. வடக்கு கிழக்கு மக்களின் உரிமைகளை  வென்றெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

முன்னைய அரசாங்கம் இழைத்த செயற்பாடுகளுக்கு நாம் பொறுப்புக்கூற முடியாது. ஆனால்  அவ்வாறான விடயங்கள் மீண்டும் இடம்பெற இடமளிக்கப்பட மாட்டாது. தமிழ் மக்களின் அனைத்து உரிமைகளையும் பாதுகாக்க நாம் செயற்படுவோம். குறிப்பாக அமைதியான முறையில் அனைத்தும் மேற்கொள்ளப்படும். வடக்கில் மீண்டும் எந்தவொரு வன்முறையும் உருவாவதற்கு இடமளிக்க முடியாது.” என்றுள்ளார்.

0 Responses to ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு; வடக்கில் மீண்டும் வன்முறை உருவாக இடம் வழங்கப்படாது: ஜோன் அமரதுங்க

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.