Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பல கட்சிகளின் கூட்டமைப்பு. அதனை ஒரு கட்சியாக மாற்ற நினைப்பது தவறு என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை வழங்கிய செவ்வியொன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பை ஒருங்கிணைந்து ஒரு கட்சியாக உருவாக்குவதில் என்ன பிரச்சினை என்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த எம்.ஏ.சுமந்திரன், “அரசியல் கட்சிகளின் கூட்டமைப்புதான் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு. அதை ஒரு கட்சியாக மாற்ற வேண்டும் என்று நினைப்பது தவறு.

அது கூட்டமைப்பாகத் தான் இருக்கிறது, அப்படியாகத் தான் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு கட்சியாக மாற வேண்டுமானால், அதுதொடர்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். அத்தகைய தீர்மானம் எதுவும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. கூட்டமைப்பில் உள்ள கட்சிகள் ஒன்றாக இணைந்திருக்க மட்டுமே தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது.” என்றுள்ளார்.

0 Responses to கூட்டமைப்புவை ஒரு கட்சியாக மாற்ற நினைப்பது தவறு: சுமந்திரன்

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.