Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கிழக்கு மாகாணத்தில் படையினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை விரைவாக விடுவிக்க வேண்டும் என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் வலியுறுத்தியுள்ளார்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் படையினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகள் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டு  பொதுமக்கள் வாழும் பகுதிகளிலிருந்து படையினர் வெளியேற்றப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மட்டக்களப்பில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே கிழக்கு மாகாண முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது, “யுத்தம் முடிவடைந்து பல ஆண்டுகள் கடந்த போதும் இன்னும் பொதுமக்கள் தமது காணிகளுக்கு செல்ல முடியாமல் ஏக்கத்துடன் காத்திருக்க வேண்டிய நிலை காணப்படுகின்றது.

அரசாங்கம் இன்று நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப பல்வேறு முயற்சிகளையும் வேலைத்திட்டங்களையும் முன்னெடுத்து வரும் நிலையில் கிழக்கு மக்களின் நல்லெண்ணத்தை பெற வேண்டுமானால் மக்களின் காணிகளை விடுவித்து அவர்கள் வாழ்வதற்கு உரிய சூழலை ஏற்படுத்த வேண்டும்.

மக்கள் தாம் எப்போது சுதந்திரமாக பாதுகாப்பாக நிம்மதியாக வாழ்கின்றோம் என உணர்கின்றார்களோ அப்போது தான் நல்லிணக்கம் கட்டியெழுப்பப்படும். சிறுபான்மை மக்களின் காணிகளில் இடம்பெறும் அத்துமீறல்கள், பலவந்தமாக வைக்கப்படும் சிலைகள் மற்றும் சிறுபான்மை மக்களின் பகுதிகளில் அமைக்கப்படும் விகாரைகள் சிறுபான்மை மக்களின் மனங்களில் அச்சத்தையும் நிம்மதியற்ற நிலையையும் ஏற்படுத்துகின்றன.

முஸ்லிம், தமிழ் மக்கள் ஒரு போதும் நல்லிணக்கத்திற்கு தடையானவர்கள் அல்ல. இதனால் சிறுபான்மையின மக்கள் தொடர்பான பெரும்பான்மையின மக்களின் பார்வைகள் மாற்றப்பட வேண்டும். நல்லாட்சி அரசாங்கம் நாட்டில் நல்லிணக்கத்தை வென்றெடுக்க வேண்டுமானால் முதலில் மக்களின் மனங்களை வென்றெடுக்க வேண்டும்.” என்றுள்ளார்.

0 Responses to கிழக்கில் படையினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை விரைவாக விடுவிக்க வேண்டும்: ஹாபிஸ் நசீர் அஹமட்

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.