Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்தி பிரச்சினைகளை உருவாக்குவதற்கு பல தரப்பினரும் தற்போது முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக கூறியுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பொதுமக்கள் அனைவரும் மிகுந்த அவதானத்துடன் இருந்து சதிகாரர்களை அடையாளம் கண்டு கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 

சிங்கள, முஸ்லிம் மக்களின் ஐக்கியத்தைக் குலைத்து சாதாரண பொதுமக்கள் மத்தியில் அமைதியின்மையை ஏற்படுத்துவதற்கு பல்வேறு சூழ்ச்சிகள் நாட்டில் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

காலம்சென்ற சங்கைக்குரிய மாதுலுவாவே சோபித தேரர் மறைந்து ஒரு வருடம் நிறைவடைவதை முன்னிட்டு இலங்கை மன்றக் கல்லூரியில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற நினைவுதின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனைக் கூறியுள்ளார்.

அங்கவீனமுற்ற படைவீரர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற 4 மாதங்களுக்கு முன்னரே அரசாங்கம் தீர்மானித்திருந்த போதும், சிலரது அரசியல் தேவைகளுக்காக அந்த அப்பாவிப் படையினரை பிழையாக வழிநடத்தி குழப்ப நிலையை உருவாக்க சிலர் முயற்சித்தனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்த பல தரப்புக்களும் முயற்சி; அவதானத்துடன் இருக்க பொதுமக்களுக்கு மைத்திரி வேண்டுகோள்!

Post a Comment

Followers