Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மத்திய அரசின் ரூபாய் நோட்டு அறிவிப்பு விவகாரத்தால்,தமிழகம் தவிர அனைத்து மாநிலங்களிலும் மக்களின் இன்னல்கள் தீர நடவடிக்கை எடுக்க மாநில முதல்வர்கள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

உதாரணமாக மேற்கு வங்க முதல்வர்:மம்தா பானர்ஜி,வங்கிகளில் போதிய பணம் இல்லையா? பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு உள்ளதா? என்று வங்கிகளுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தி வருகிறார்.

ஆந்திர முதல்வர்: சந்திரபாபு நாயுடு,நெருக்கடியில் இருந்து மீள 10 ஆயிரம் கோடி வேண்டும் அதுவும் செல்லும் புதிய நோட்டுகளாக வேண்டும் என்று  மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்..

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்,: மூன்று நாட்களில் நிலமையை சீராக்க மத்திய அரசுக்கு கெடு விதித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.  கேரள முதல்வர் பினராயி விஜயன், பண பற்றாக்குறையை தீர்க்க  ரிசர்வ் வங்கியின் முன் மறியல் போராட்டம்.நடத்தி வருகிறார்.

0 Responses to தமிழகம் தவிர அனைத்து மாநிலங்களிலும் மக்களின் இன்னல்கள் தீர நடவடிக்கை

Post a Comment

Followers