Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அபிவிருத்தி நடவடிக்கைகளின் போது நாட்டின் ஒரு பகுதியை கைவிட்டு பாகுபாடு காட்டியதன் பெறுபேறே யுத்தம் வரை நீண்டு சென்றதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அபிவிருத்தி செயற்பாடுகளில் ஆரம்பத்தில் இருந்தே அவற்றை நியாயமாக நாட்டுக்காக நிறைவேற்றியிருந்தால் மூன்று தசாப்த கால யுத்தத்தினை அனுபவிக்க வேண்டி வந்திருக்காது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மகாவலி அதிகார சபையின் புதிய நியமனங்கள் மற்றும் பதவி உயர்வு பெற்ற அலுவலர்களுடன் நேற்று திங்கட்கிழமை கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனைக் கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “எனக்கு வாக்களித்த மற்றும் வாக்களிக்காத அனைவரையும் ஒரேவிதமாக நடத்துவது ஒரு நாட்டின் ஜனாதிபதியாக எனது பொறுப்பாகும். அத்தோடு, சுயாதீனம், பக்கச்சார்பின்மை மற்றும் நடுநிலையாக செயற்படுதல் ஜனாதிபதிக்குரிய பொறுப்பாகும்.

அபிவிருத்தியின்போது நாட்டின் ஒரு பகுதியை கைவிட்டதன் பெறுபேறே போர்வரை நீண்டு சென்றது. அபிவிருத்தி செயற்பாடுகளின் ஆரம்பத்தில் இருந்தே அவற்றை நியாயமாக நாட்டுக்காக நிறைவேற்றியிருந்தால் மூன்று தசாப்த கால போரை அனுபவிக்க வேண்டி இருந்திருக்காது. தனிப்பட்ட ரீதியிலன்றி நாட்டுக்கும் மக்களுக்கும் முன்னுரிமை வழங்கி நாட்டின் அனைத்துப் பிரதேசங்களிலும் உள்ள மக்களுக்காக சேவையாற்றுவது அனைத்து அரச அலுவலர்களின் பொறுப்பாகும்.

நாட்டின் பொருளாதாரத்தில் மிக முக்கிய எதிர்காலமான மகாவலி அதிகார சபை, தனது பணிப் பொறுப்புக்களை புதிய நோக்குடனும் புதிய தோற்றத்துடனும் முன்னொண்டு செல்வேண்டும். இன்றைய நாளுக்காவும், எதிர்கால தலைமுறையினருக்காகவும் தமது பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்கு அனைத்து அலுவலர்களும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்.” என்றுள்ளார்.

0 Responses to பாகுபாடே மூன்று தசாப்த கால யுத்தத்துக்கு வழி கோலியது: மைத்திரிபால சிறிசேன

Post a Comment

Followers