Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அங்கவீனர்களுக்கான கொடுப்பனவை பெற்றுத்தரக் கோரி யுத்தத்தில் அவயங்களை இழந்த படைவீரர்கள் முற்றுகைப் போராட்டமொன்றை கொழும்பில் நேற்று திங்கட்கிழமை முன்னெடுத்தனர். 

தங்கள் கோரிக்கைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து எழுத்து மூலமான பதில் கிடைக்கும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

முப்படை மற்றும் பொலிஸ் துறையைச் சேர்ந்த 12 வருடங்களுக்கு குறைந்த சேவைக் காலத்தையுடைய இப்படைவீரர்கள் தாம் ஓய்வு பெறும்போது தமக்கு வழங்குவதாக கூறிய ஊனமுற்றோருக்கான கொடுப்பனவைக்கோரி கடந்த 2008ஆம் ஆண்டு முதல் போராட்டம் நடத்தி வருவதாகவும், எனினும் இம்முறை இதற்குரிய தீர்வு கிடைக்காமல் கொழும்பை விட்டு நகரப்போவதில்லை என்றும் படைவீரர்களின் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய முன்னணியின் அழைப்பாளர் வசந்த தெரிவித்துள்ளார்.

நாம் யுத்தத்தால் ஊனமுற்றதால் வைத்தியர்களின் சிபாரிசின்பேரில் ஓய்வு பெற்றுச் சென்றோம். எனினும் அப்போது எமக்கு வழங்குவதாக வாக்குறுதியளித்த ஊனமுற்றோருக்கான கொடுப்பனவு இதுவரை எமக்கு வழங்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்றுக் காலை ஊர்வலமாக வந்த யுத்தத்தினால் ஊனமுற்ற படை வீரர்கள் ஜனாதிபதி செயலகத்தை நோக்கிச் செல்வதனை பொலிஸார் தடுப்பு வேலிகளைப் பயன்படுத்தி தடை செய்தனர். அதனையடுத்து முன்னணியின் அழைப்பாளர் உள்ளிட்ட முக்கிய பிரதிநிதிகளுடன் மாத்திரம் ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் நேற்றுக் காலை பேச்சு நடத்தினார். சுமார் ஒரு மணித்தியாலத்திற்கும் மேலாக இப்பேச்சு வார்த்தை நீடித்தது.

இதில் திருப்தி அடையாத பிரதிநிதிகள் மீண்டும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட பிரதிநிதிகளை சந்தித்துப் பேச்சு நடத்தினர். இதன்போது ஏற்கனவே வழங்குவதாக வாக்குறுதி அளிக்கப்பட்ட கொடுப்பனவுக்கு மேலதிகமாக மாற்றுத் தொகையை வழங்குவதாக பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

0 Responses to அங்கவீனர்களுக்கான கொடுப்பனவை பெற்றுத்தரக் கோரி யுத்தத்தில் அவயங்களை இழந்த படைவீரர்கள் போராட்டம்!

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.