Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் அங்கம் வகித்து பாரிய குற்றங்களோடு சம்பந்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் ‘கருணா அம்மான்’ என்கிற விநாயகமூர்த்தி முரளிதரனும், ‘கே.பி’ என்கிற செல்வராஜா பத்மநாதனும் சுதந்திரமாக நடமாடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சிறு குற்றங்கள் புரிந்த அரசியல் கைதிகளை ஏன் விடுதலை செய்ய முடியாது என்று சிலைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் கேள்வியெழுப்பியுள்ளார்.

அத்தோடு, அதனைச் சுட்டிக்காட்டி அரசியல் கைதிகளின் விடுதலைக்கு பரிந்துரைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிப்பிட்டுள்ளார்.

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் பல நடவடிக்கைகள் மேற்கொண்டும் இதுவரை விடுதலை செய்யப்படவில்லை எனவும் இறுதியாக நவம்பர் 07ம் திகதிக்குள் ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுப்பதாக பதிலளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் தெரிவித்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட 16 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒப்பமிட்ட, ஓர் அவசர மனு ஒன்றை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளனர். இவ்வாறு கூட்டமைப்பினால் அனுப்பி வைக்கப்பட்ட மனு தொடர்பில் சிறைச்சாலை அமைச்சரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

டி.எம்.சுவாமிநாதன் மேலும் கூறியுள்ளதாவது, “விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து பாரிய சம்பவங்களுடன் தொடர்புபட்ட கருணா, கே.பி போன்ற பலர்  சுதந்திரமாக வெளியில்  நடமாடும்போது சிறு குற்றம் புரிந்த  கைதிகளையும் விடுதலை செய்யலாம் என்றே பரிந்துரைத்துள்ளோம் . குறிப்பாக நீண்ட காலம் தடுப்பில் இருத்ததன் அடிப்படையில் இவர்களை மன்னிப்பின் அடிப்படையில் விடும் அதிகாரம் அமைச்சிற்கு கிடையாது. ஆனால் அது ஜனாதிபதியினால் மட்டுமே முடியும். இதன் காரணத்தினால் தற்போது கைதிகளாக சிறயைிலுள்ளவர்களில் பலரை மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யலாம் எனும் பரிந்துரையை நாமும் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளோம்.   கூட்டமைப்பின் சார்பில் கடந்த காலங்களில் இது தொடர்பில் முன்வைத்த கோரிக்கைகளுக்கு அவகாசம் கோரப்பட்டிருந்தது. அது நிறைவுறும் நிலையில் இதனை அவர்கள் கோரியிருக்கலாம். இருப்பினும் இது தொடர்பாக ஆராய்ந்து ஆக்கபூர்வமான நடவடிக்கை இடம்பெறவேண்டும் என்றே நாமும் கருதுகின்றோம்.” என்றுள்ளார்.

0 Responses to ‘கருணா’ சுதந்திரமாக நடமாடலாம் என்றால்; ஏன் அரசியல் கைதிகளை விடுவிக்க முடியாது?: சுவாமிநாதன்

Post a Comment

Followers