Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கொழும்பு வெள்ளவத்தையில் பொலிஸ் பதிவுகளை மேற்கொள்ளவதற்கான படிவங்களை நேற்று திங்கட்கிழமை பொலிஸார் விநியோகித்துள்ளனர். இதனால், மக்கள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர்.

யுத்தம் நடைபெற்ற காலப்பகுதிகளிலும் அதற்குப் பின்னரான காலப்பகுதிகளிலும், இவ்வாறான பொலிஸ் பதிவுகள் இடம்பெற்று, அதன் மூலமாக மக்களுக்கு இடர்கள் ஏற்பட்டிருந்த நிலையில், மீண்டும் பொலிஸ் பதிவு மேற்கொள்ளப்படுகிறதா? என்கிற சந்தேகத்தில் மக்கள் பதற்றமடைந்தனர்.

இதனிடையே, எந்தவொரு பிரதேசத்திலும், எந்தவொரு நபரிடமும், அவர்களின் இருப்பிடத்தைப் பதிவு செய்யுமாறு கோரிக்கை விடுக்க, பொலிஸாருக்கு முடியும் என்று பொலிஸ் ஊடகப்பிரிவின் பணிப்பாளருமான ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். ஆட்களைப் பதிவு செய்யுமாறு கோருவதற்கு, பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் கீழ் இடமுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

0 Responses to வெள்ளவத்தையில் பொலிஸ் பதிவு; மக்கள் அங்கலாய்ப்பு!

Post a Comment

Followers