Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மத்திய அரசின் திட்டங்களை தமிழக அரசு திடீரென ஆதரித்ததன் மர்மம் என்ன என்று, தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

முதல்வர் ஜெயலலிதா, கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக சென்னை அப்போலோ மருத்துவமனையில்  சிகிச்சைப் பெற்று வருகிறார்.அவரது உடல்நலம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை தமிழக அரசு தற்போது மத்திய அரசின் திட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இதில் உணவுப் பாதுகாப்புச் சட்டமும் ஒன்று. இதற்கு ஜெயலலிதா கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்த நிலையில், இப்போது தமிழக அரசு இந்த திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. 

இதுக் குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள மு.க.ஸ்டாலின், தமிழக அரசு, மத்திய அரசின் திட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வந்தது என்றும், ஜெயலலிதா பிரதமரிடம் இதுக் குறித்து கடிதமே கொடுத்து வந்தார் என்றும் தெரிவித்தார். ஆனால், இப்போது தமிழக அரசு மத்திய அரசின் திட்டங்களை ஆதரிப்பதால் மர்மம் என்ன என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

0 Responses to மத்திய திட்டங்களை தமிழக அரசு திடீரென ஆதரித்ததன் மர்மம் என்ன?: மு.க.ஸ்டாலின்

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.