Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினும் பெருவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொருளாதார மாநாட்டில் சந்தித்துப் பேசியுள்ளனர்.

பெரு தலைநகர் லிமாவில் நேற்று ஆரம்பித்த ஆசிய பசுபிக் பொருளாதார கூட்டுறவு மாநாட்டில் உத்தியோகபூர்வமாக இவர்கள் இருவரும் சந்தித்துக் கொண்ட போதும் இவர்கள் பேசிக் கொண்ட விடயங்கள் வெளியே காத்திருந்த ஊடகங்களுக்குத் தெரிய வரவில்லை. மேலும் இவர்கள் பேசிக் கொண்ட விடயங்கள் குறித்து வெள்ளை மாளிகையும் உடனடியாகக் கருத்துத் தெரிவிக்கவில்லை.

உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா நடந்து கொண்ட விதத்தாலும் சிரியாவின் அலெப்போவில் அதிபர் பஷார் அல் அசாத் சார்பாக குண்டு வீசி வருவதாலும் ஒபாமா நிர்வாகத்தின் கீழ் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப் பட்டிருந்தன. இதனால் தற்போது அமெரிக்காவின் புதிய அதிபராகப் பதவி ஏற்கவுள்ள டொனால்ட் டிரம்பின் நிர்வாகத்தின் கீழ் அமெரிக்க ரஷ்ய நல்லுறவு எவ்வாறு பேணப் படக் கூடும் என்பது தொடர்பில் இரு நாட்டு அதிபர்களும் முக்கியமாகப் பேசியிருக்கலாம் எனத் தெரிய வருகின்றது. இதேவேளை டிரம்ப் அதிபராகத் தேர்வாகி சில நிமிடங்களுக்குள்ளேயே அவரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்துத் தெரிவித்திருந்த புட்டின் ரஷ்யா டிரம்பின் நிர்வாகத்தில் அமெரிக்காவுடன் மேலும் நெருங்கிய நட்பு நாடாகத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

இம்மாநாட்டின் பின்னர் பல இளைஞர்களின் கேள்விக்குப் பதில் அளித்த ஒபாமா புதிய அதிபர் டிரம்பை யாரும் மோசமானவராகக் கருத வேண்டாம் எனவும் முதலில் அவரை வெள்ளை மாளிகையில் பணியாற்ற விட்டுப் பார்ப்போம் என்றும் உலக நாடுகளின் அமைதிக்கும் வளர்ச்சிக்குமான பொறுப்பு அவருக்கு உள்ளது என்றும் தெரிவித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளில் தேர்தல் பிரச்சாரத்தில் கையாளப் பட்ட அனைத்துக் கருத்துக்களும் ஒரு அதிபராக ஆட்சிக்கு வந்த பின் அப்படியே அமுலாக்குவது என்பது நடைமுறையில் சாத்தியமில்லை எனவும் அதிபர் ஒபாமா தெரிவித்திருந்தார்.

0 Responses to பெருவில் பொருளாதார மாநாட்டில் சந்தித்துப் பேசினர் ஒபாமாவும் புட்டினும்..

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.