Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கை அரசாங்கம் கொண்டுவரவுள்ள புதிய பயங்கரவாத தடுப்புச் சட்டம் பொலிஸாருக்கு மேலும் அதிகாரங்களை வழங்கும் தோற்றப்பாடுகளைக் கொண்டிருப்பதாகவும், இதனால் பொதுமக்கள் அதிக பாதிப்புக்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது. 

பாதுகாப்புத் துறையில் மறுசீரமைப்பொன்றை மேற்கொள்வதற்கு அரசாங்கம் உண்மையில் விரும்புவதாயின், பொலிஸாரினால் மேற்கொள்ளப்படும் துஷ்பிரயோகங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மாறாக உத்தேச பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தில் பொலிஸாருக்கு மேலும் அதிகாரங்கள் வழங்கப்படுவது நிலைமைகளை மேலும் மோசமாக்குமென மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்திய பணிப்பாளர் பிரட் அடம்ஸ் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் சித்திரவதைகளுக்கு எதிரான குழுவின் 59வது கூட்டத் தொடர் ஜெனீவாவில் நேற்று திங்கட்கிழமை ஆரம்பமானது. டிசம்பர் 07ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தொடரில் இலங்கையில் இடம்பெற்ற சித்திரவதைகள் தொடர்பில் எதிர்வரும் 15ஆம் திகதி கலந்துரையாடப்படவுள்ளது.

இவ்வாறான நிலையிலேயே மனித உரிமைகள் கண்காணிப்பகம் இதனைத் தெரிவித்துள்ளது. கடந்த ஒக்டோபர் மாதம் 21ஆம் திகதி யாழ்ப்பாணம் கொக்குவில் பிரதேசத்தில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களான விஜயகுமார் சுலக்சன், நடராசா கஜன் ஆகியோர் பொலிஸாரினால் கொல்லப்பட்டனர்.  இவர்களின் கொலைகள் முதலில் மறைக்கப்பட்டபோதும் பின்னர் உண்மை புலப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொலிஸ் தரப்பு சம்பந்தப்படும் தன்னிச்சையான கைதுகள், சித்திரவதைகள், சட்டத்துக்கு முரணான கொலைகள் என்பன வழமையான விடயங்களாக மாறியுள்ளன. எனினும், எந்தவொரு அதிகாரியும் பொறுப்புக்கூறுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்கவில்லையென்றும் பிரட் அடம்ஸ் தெரிவித்துள்ளார்.

0 Responses to பொலிஸாருக்கு அதிக அதிகாரங்களை வழங்குவது பொதுமக்களுக்கு பாதிப்பானது: மனித உரிமைகள் கண்காணிப்பகம்

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.