Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூர இடமளிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார். 

போரினால் அங்கவீனமுற்ற படையினருக்கு வாழ்வதற்கு வழியமைக்கப்பட்டுள்ளது. ஆனால், போரினால் அங்கவீனமுற்ற விடுதலைப் புலி முன்னாள் உறுப்பினர்களும், இறந்தவர்களின் குடும்பத்தினரும் அநாதரவாக உள்ளனர். அவர்களும் மனிதர்களே அவர்களுக்குச் செய்ய வேண்டிய சேவை குறித்து அரசாங்கம் கவனம் செலுத்திவருகின்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வரவு- செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான மூன்றாவது நாள் விவாதம் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு பேசும் போதே அமைச்சர் வஜிர அபேவர்த்தன மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “1971, 1988, 1989, 1990 கலவரங்களின்போது அரசாங்கத்துக்கு எதிராகப் போராடி இறந்தவர்களை நினைவுகூர இடமளிக்கப்பட்டுள்ளது. யுத்தத்தின் போது இறந்தவர்களை நினைவுகூர இடமளிப்பது குறித்து கவனம் செலுத்தி வருகிறோம். கலவரம், யுத்தங்களின் பின் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வாதாரம் மேம்பாடு தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்.

வன்னி பிரதேசத்தில் வெற்றிடமாக உள்ள கிராம உத்தியோகத்தர்களின் வெற்றிடங்களை டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் நிரப்புவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மோதல் ஏற்படாத வகையில் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்க வேண்டும்.” என்றுள்ளார்.

0 Responses to போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூர அனுமதிப்பது தொடர்பில் அரசு கவனம்: வஜிர அபேவர்த்தன

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.