Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சமஷ்டி முறை உருவாக்கப்பட்டு நாடு துண்டாடப்படுவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அனுமதி வழங்காது என்று அந்தக் கட்சியின் முக்கியஸ்தரும் சமூக சேவைகள் நலன்புரி அமைச்சருமான எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

புதிய அரசியலமைப்பினை பொது வாக்கெடுப்பின்றி நிறைவேற்றுவது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கவனம் செலுத்தி வருகின்றார். அவரின் நிலைப்பாட்டினையே சுதந்திரக் கட்சியும் பிரதிபலிக்கும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

பத்தரமுல்லையில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும்போதே எஸ்.பி.திசாநாயக்க மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் தெரிவித்துள்ளதாவது, “புதிய அரசியலமைப்பின் மூலம் நாட்டின் ஒருமைப்பாட்டுக்கோ, பெளத்த மதத்திற்கோ பாதிப்பு ஏற்படுத்தப்படாது. அதுபோல, சமஷ்டி முறை உருவாக்கப்பட்டு நாடு துண்டாடப்படாது.

உள்ளூராட்சி தேர்தல் முறைதொட்டு இனி வரும் அனைத்து தேர்தல் முறைகளையும் புதிய கலப்பு தேர்தல் முறையில் நடத்துவதற்கு நாம் முயற்சிக்கின்றோம். இந்நிலையில் 20வது அரசியலமைப்பு திருத்தம் இன்றியமையாதது.

இதேவேளை எதிர்வரும் தேர்தலில் பலர் சுதந்திரக் கட்சி சார்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்ணனியில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர். இதுவரை எம்முடன் சேராமல் எம்மை விமர்சனம் செய்து வந்த பலர் இன்று எம்முடன் இணைவதற்கு ஆர்வமாக உள்ளனர்.

இலங்கையின் தேசிய அரசாங்கம் உலகுக்கான சிறந்த எடுத்துக்காட்டாகும். தேசிய அரசாங்கத்தில் இருந்தாலும் எதிர்வரும் தேர்தல்களில் சுதந்திரக் கட்சிக்கு அமோக வெற்றி அவசியமென்பதில் ஜனாதிபதி உறுதியாக இருக்கின்றார்.” என்றுள்ளார்.

0 Responses to சமஷ்டி இல்லை; பொது வாக்கெடுப்பின்றி அரசியலமைப்பு நிறைவேற்றம்: சுதந்திரக் கட்சி தீர்மானம்!

Post a Comment

Followers