Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஒன்றுபட்ட சீனக் கொள்கையில் தனக்கு உடன்பாடு இல்லை எனவும் அமெரிக்கா என்ன செய்ய வேண்டும் என சீனா உத்தரவிட முடியாது எனவும் அமெரிக்க வருங்கால அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளிப்படையாகக் கூறியிருப்பது சீன அமெரிக்க அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தைவான் அதிபர் டிரம்பை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்ததாலேயே இவ்விவகாரம் சூடு பிடித்திருப்பதாகத் தெரிய வருகின்றது. இது குறித்து டிரம்ப் கூறுகையில் தைவான் அதிபர் வாழ்த்துக் கூறுவதற்காக அவராகவே தான் தனக்குத் தொலைபேசியில் தொடர்பு கொண்டார் என்றும் அதை நிராகரிப்பது அவரை அவமதிப்பதற்குச் சமன் என்ற நிலையிலும் அது மிகச் சிறிய ஒரு உரையாடல் என்ற நிலையிலும் சீனா நாம் தைவானுடன் பேசியிருக்கக் கூடாது என்று எவ்வாறு கட்டளையிட முடியும் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதேவேளை டிரம்பின் இந்தக் கூற்றுக்குப் பதிலடியாக சீனாவும் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது திங்கட்கிழமை சீனாவின் ஒரே தேசக் கொள்கையில் மாற்றம் ஏதும் கொண்டு வர அமெரிக்கா நிர்ப்பந்திக்குமானால் அது இவ்விரு தேசங்களுக்கும் இடையே மிகப்பெரிய விரிசலைக் கொண்டு வரும் என சீன வெளியுறவுத் துறை அமைச்சின் பேச்சாளர் கெங் சுவாங் தெரிவித்துள்ளார்.

இதேவேளை வடகொரிய விவகாரம் மற்றும் தென் சீனக் கடல் ஆதிக்கம் போன்ற விடயங்களில் வாஷிங்டன் நிர்வாகத்துக்கு ஒத்துழைப்புத் தர மறுப்பதுடன் சர்வதேச சந்தையில் தனது பணமதிப்பீட்டையும் குறைக்க முற்படுதல் போன்ற நடவடிக்கைகளையும் டிரம்ப் சுட்டிக்காட்டி எதிர்ப்புத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to சீனாவின் ஒரே சீனக் கொள்கையைக் கடுமையாக எதிர்க்கும் டிரம்ப் : பதிலடியாக சீனா கடும் எச்சரிக்கை

Post a Comment

Followers