Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அண்மையில் அலெப்போவின் பெரும்பான்மைப் பகுதிகளை சிரிய அரசு கைப்பற்றியதைத் தொடர்ந்து அங்குள்ள கிளர்ச்சிப் படை புதிய யுத்த நிறுத்தத்தை அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து கடந்த சில வருடங்களாகக் கடும் யுத்தத்தை சந்தித்து வந்த சிரியாவின் அலெப்போ நகரிலுள்ள பொது மக்களும் கிளர்ச்சிப் படைகளும் இன்று வியாழக்கிழமை முதல் படிப்படியாக அலெப்போவை விட்டு வெளியேற ஆரம்பித்துள்ளனர்.

கிளர்ச்சியாளர்களும் மெல்ல மெல்ல சிரியாவின் 2 ஆவது மிகப் பெரிய நகரான அலெப்போவை விட்டு வெளியேறி வருவதால் சுமார் 5 வருட உள்நாட்டுப் போருக்குப் பிறகு அதிபர் பஷார் அல் அசாத் இன் படைகள் அந்நகரைப் பூரணமாகத் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரக் கூடிய சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதுடன் இது அவர்களின் மிகப் பெரிய வெற்றியாகவும் அமைந்துள்ளது. இந்நிலையில் அலெப்போவின் தெற்குப் பகுதியில் பல பஸ் வண்டிகளும் அம்புலன்ஸ் வண்டிகளும் பொது மக்களை மீட்கச் சென்றுள்ளன. சிரிய மாநிலத் தொலைக் காட்சியின் தகவல் படி சுமார் 4000 கிளர்ச்சிப் போராளிகளும் அவர்களது குடும்பங்களும் கூட அரசின் திட்டப் படி மீட்கப் படவுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

இதேவேளை அலெப்போவில் அரச படைகளுக்கு சார்பாக வான் தாக்குதல் நடத்தி வந்த ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சு மாஸ்கோவில் வைத்துத் தகவல் அளிக்கும் போது அலெப்போவில் இருந்து வெளியேறும் கிளர்ச்சிப் படையினரின் பாதுகாப்பு சிரிய அதிகாரிகளாலும் தம்மாலும் உறுதி படுத்தப் பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளது. மேலும் சிரியாவில் இயங்கி வரும் சர்வதேச செஞ்சிலுவை சங்கமும் பொது மக்கள் மற்றும் கிளர்ச்சியாளர்கள் பாதுகாப்பாக வெளியேறுவதைக் கண்காணித்து வருகின்றது. கிழக்கு அலெப்போ  பகுதியில் புதன்கிழமை வரை சுமார் 10 000 இற்கும் அதிகமான மக்கள் போதிய உணவோ மருத்துவ வசதியோ இன்றி ரஷ்யாவின் வான் வழித் தாக்குதல்களை எதிர் கொண்டு வந்ததாகக் கூறப்படுகின்றது. இதனால் முன்னதாக கிளர்ச்சிப் படை வெளியேற வேண்டிய நிர்ப்பந்தத்திலும் அலெப்போவை விட்டு வெளியேறத் தாமதம் செய்ததாகக் கூறப்பட்டது.

0 Responses to சிரிய அரசு வசம் அலெப்போ : புதிய யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை அடுத்து ஆரம்பிக்கவுள்ள மீட்புப் பணிகள்

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.