Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வடக்கு மாகாண எல்லைக்குட்பட்ட அரச காணிகள், மாகாண சபையின் கவனத்துக்கு கொண்டு வரப்படாமல் அபகரிக்கப்பட்டு வருவதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்த காணி அபகரிப்புக்குப் பின்னால், அரசியல் தலையீடுகள் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு மாகாண சபையில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற விவாதமொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே சி.வி.விக்னேஸ்வரன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் தெரிவித்துள்ளதாவது, வடக்கு மாகாணத்தில் பெருமளவிலான காணிகளை இராணுவத்தினர் தம்வசம் வைத்துள்ள நிலையில், தற்போது அரச காணிகளையும் சட்டரீதியாக தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அரச காணிகள் மட்டுமல்லாமல், பெருமளவிலான தனியார் காணிகளும், படையினரின் கட்டுப்பாட்டினுள் கொண்டுவரப்பட்டுள்ளதோடு, அவற்றை விடுவித்துக் கொள்ள முடியாத நிலைமை காணப்படுகிறது. எனவே, இது தொடர்பில் மத்திய அரசிற்கு அடிக்கடி அழுத்தம் கொடுக்க வேண்டியநிலை ஏற்பட்டுள்ளது.” என்றுள்ளார்.

0 Responses to வடக்கு மாகாணத்துக்குரிய அரச காணிகள் அபகரிக்கப்படுகின்றன: சி.வி.விக்னேஸ்வரன்

Post a Comment

Followers