Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஹைதராபாத்தில் இருந்த ஜெ.ஜெ. கார்டனை ரத்த சொந்தமுள்ள பெண்ணுக்கு எழுதி வைத்தார் ஜெயலலிதா என்று ஒரு தகவல் கசிந்து வருகிறது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஹைதராபாத்தில் உள்ள தனது சொத்தை, அவரின் உறவுக்கார பெண் ஒருவருக்கு எழுதி வைத்துள்ள விவகாரம் தற்போது வெளியே கசிந்துள்ளது. ஜெயலலிதா நடிகையாக இருந்த போது, ஹைதராபாத் பேட்பஷிராபத் எனும் பகுதியில் உள்ள  ஜி.டி.மெட்லா எனும் இடத்தில் 4 ஏக்கரும், ஹோம்பள்ளி எனும் இடத்தில் 7 ஏக்கர் நிலமும் வாங்கியுள்ளார். 

ஜெ.ஜெ. கார்டன் என பெயரிடப்பட்ட அந்த நிலத்தில் காம்பவுண்டு சுவர் எழுப்பப்பட்டுள்ளது. அந்த தோட்டத்தில் ஒரு விருந்தினர் இல்லமும் கட்டப்பட்டுள்ளது. அந்த இடத்தைத்தான் ஜெயலலிதா தனது ரத்த சொந்தத்தில் உள்ள ஒரு உறவுக்கார பெண்ணின் பெயரில் எழுதி வைத்துள்ளார். அவர் மீதான சொத்துகுவிப்பு வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்றபோது, சார் பதிவாளர் அந்த உயிலுடன் பல முறை சி.பி.ஐ நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். 

ஆனால், அந்தப் பெண் குறித்த தகவலை சார் பதிவாளர் அலுவலகம் வெளியிட மறுத்துவிட்டது. சம்பந்தப்பட்ட அந்த பெண் வந்து கேட்கும்போது அந்த உயிலை கொடுத்து விடுவோம் என அவர்கள் தெரிவித்துள்ளார்கள். 

அந்த இடம் தற்போது மாதம் ரூ.25 ஆயிரத்திற்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. அங்கு ராமகிருஷ்ண ராஜூ என்பவர் காய்கறி மற்றும் எலுமிச்சை பழங்களை பயிர் செய்துள்ளார்.2007ம் ஆண்டு ஜெயலலிதா அந்த தோட்டத்திற்கு வருடத்திற்கு ஒருமுறை சென்றுள்ளார். ஆனால், அதன்பின் அவர் அங்கு செல்லவே இல்லை.

0 Responses to கார்டனை ரத்த சொந்தமுள்ள பெண்ணுக்கு எழுதி வைத்தாரா ஜெயலலிதா?

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.

அதிகமாக வாசிக்கபட்டவை...