Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அதிமுக மீதான பாஜகவின் 'கரிசனம்' நாடகமே என்று வீரமணி குற்றச்சாட்டியுள்ளார்.

திராவிட இயக்கங்களுக்கு தாங்கள்தான் மாற்று என்ற பாஜகவினரின் 'கரிசனம்' அதிமுகவின் மீது கரைபுரண்டு ஓடத் தொடங்கிவிட்டது. எனவே அதிமுகவினருக்கு எச்சரிக்கை தேவை. இது நாடகமே என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:  அதிமுகவின் பொதுச்செயலாளராகவும், முதல்வராகவும் இருந்த ஜெயலலிதா மறைந்து மூன்று நாட்களே ஆன நிலையில், அக்கட்சிக்குள்ளும், ஆட்சி அமைப்புக்குள்ளும் பிளவுகளை ஏற்படுத்திட, குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கலாம் என்ற திட்டத்துடன் சில சக்திகள் தூண்டிலைத் தூக்கிக்கொண்டு திரிகின்றன.

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் அடக்கம் நிகழ்ந்து இன்னும் அந்த ஈரம்கூட காயவில்லை; அதற்குள் சிலரின் சீற்றம் ஆங்கில ஏடுகளின் வாயிலாக ஆரம்பமாகிவிட்டது. அதிமுகவின் எம்எல்ஏக்கள், முக்கிய பொறுப்பாளர்களிடையே பிளவை வலிந்து உண்டாக்கி, இடையே புகுந்து, நூல் பிளந்து பார்க்கும் முயற்சியில் சிலர் ஈடுபடத் துவங்கிவிட்டனர்.

சுமுகமாகவே புதிய அமைச்சரவை அரசியல் சட்டக் கடமைப்படி பதவியேற்று விட்டது. ஓ.பன்னீர்செல்வத்தை முதல்வராகக் கொண்டு; பழைய அமைச்சர்கள் மீண்டும் அமைச்சர்களாகி விட்டனர். அவர்கள் மூலமோ அல்லது ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள் மூலமோ எந்த அதிருப்திக் குரலும் கிளம்பாத நிலையில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் பதவி இன்னமும் நிரப்பப்படாத சூழலைப் பயன்படுத்திக் கொண்டு, பல்வேறு கலகங்களை உருவாக்கிட, கட்டுக்கோப்பான அக்கட்சியினை ஜாதி அடிப்படையில் பிரித்தாளும் வேலைகள் செய்யத் தொடங்கிவிட்டனர்.

 ஜெயலலிதாவின் நிழலாக இறுதிவரை இருந்து, மெய்க்காப்பாளராக, சேவகியாக, சிறந்த பாசம் காட்டிய தங்கையாகவே வாழ்ந்து, ஜெயலலிதாவின் கஷ்டங்கள், சிறைவாசங்களில் பங்கேற்ற சசிகலாவைப் பற்றி தேவையில்லாமல் பெரும் ஆய்வே நடத்தி, அரசியல் ஆவர்த்தனம் செய்கிறார்கள். முதல்வர் ஜெயலலிதா மறைந்து துக்கம் 7 நாள் என்பதுகூட தீராத நிலையில், துயரத்தில் உழலும் அவர்களிடையே குட்டையைக் குழப்ப தூண்டிலைத் தூக்கிப் புறப்பட்டு

விட்டார்கள்! அக்கட்சியின் முக்கியப் பொறுப்பாளர்களுக்கு இல்லாத கவலையும், அக்கறையும் இந்த அறிவுஜீவிகளுக்கு ஏன்? விஷயம் புரிந்தவர்களுக்குக் கண்டிப்பாகவே விளங்கும்.

பாஜகவின் கரிசனம் இன்னொரு பக்கம் தங்கள் பக்கம் சாய்த்துக்கொள்ள - திராவிட இயக்கங்களுக்கு தாங்கள்தான் மாற்று என்ற பாஜகவினரின் 'கரிசனம்' அதிமுகவின் மீது கரைபுரண்டு ஓடத் தொடங்கிவிட்டது. இரண்டு கட்சிகளின் லட்சியங்களும் ஒன்றுதானாம்; வெங்கய்யா நாயுடு கசிந்துருகி கண்ணீர் மல்கக் கூறுகின்றார்.

காவிரி நதி நீர் ஆணையத்தை சட்டப்படி அமைக்க கடைசி நேரத்தில் மறுத்த பிரதமர் மோடி, அதிமுக எம்பிக்களைக்கூட சந்திக்க மறுத்த பிரதமர் மோடி ''நான் தொலைபேசியில் கூப்பிடும் தூரத்தில்தான் இருக்கிறேன்'' என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் கூறுகிறாரே, எப்படி? சசிகலாவின் தலையில் கைவைத்து ஆறுதல் கூறும் மோடியின் நோக்கம் என்ன?  அதிமுகவில் எச்சரிக்கை தேவை

எனவே, அதிமுகவின் சகோதரர்களே, சிண்டு முடிந்திடுவோரை, உங்கள்மீது திடீர் அனுதாபம், அளவற்ற ஆதரவு தருவது போல் நாடகம் போடுவோரை விழிப்போடு புரிந்துகொள்ளுங்கள். கட்சியின் கட்டுக்கோப்பை - கட்டுப்பாட்டை மறவாதீர். சிறுசிறு ஓட்டைகளைத் தேடி அலைந்து அவற்றைப் பெரிதாக்குகின்றனர். எனவே எச்சரிக்கை தேவை. இவ்வாறு வீரமணி கூறியுள்ளார்.

0 Responses to சசிகலாவின் தலையில் கைவைத்து ஆறுதல் கூறும் மோடியின் நோக்கம் என்ன? - கி.வீரமணி

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.