Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் கடந்த வருடம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தினை இலங்கை அரசாங்கம் எவ்வாறு நடைமுறைப்படுத்தி வருகின்றது என்பது தொடர்பிலான எழுத்து மூலமான அறிக்கையை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் சையிட் அல் ஹூசைன் வெளியிடவுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 34வது கூட்டத்தொடர் எதிர்வரும் 2017ஆம் ஆண்டு பெப்ரவரி 27ஆம் திகதி முதல் மார்ச் 24ஆம் திகதி வரை ஜெனீவாவில் நடைபெறவுள்ள நிலையில் இலங்கை குறித்த அறிக்கையை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர், மார்ச் 22ஆம் திகதி சமர்ப்பிப்பார்.

இதேவேளை, ஐக்கிய நாடுகள்  மனித உரிமைகள் ஆணையாளர் வெளியிடும் அறிக்கைக்கு இலங்கை அரசாங்கம் பதிலளிக்க உள்ளதுடன், அரசாங்கத்தின் தரப்பிலும் ஒரு அறிக்கை சமர்ப்பிக்கப்படும் எனக் கூறப்படுகின்றது.

0 Responses to அடுத்த ஜெனீவா அமர்வில் இலங்கை தொடர்பிலான அறிக்கையை ஐ.நா. ஆணையாளர் சமர்பிக்கவுள்ளார்!

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.