Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையில் சொல்லிக் கொள்ளக் கூடிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை மிலேனிய சவால்களுக்கான ஒத்துழைப்பு சபையின் தீர்மானம் எடுத்துக்காட்டுவதாக அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்க செயலாளர் நிஷா தேசாய் பிஸ்வால் தெரிவித்துள்ளார்.

புதிய மிலேனிய சவால்களுக்கான ஒத்துழைப்பு அமைப்பின் பணிப்பாளர் சபை, பொருளாதார வளர்ச்சி மற்றும் வறுமை குறைப்பை ஊக்குவிப்பதற்கான நாடாக இலங்கையை தேர்வு செய்துள்ளது.

மிலேனிய சவால்களுக்கான ஒத்துழைப்பு அமைப்பின் உதவித் திட்டத்திற்குள் இலங்கை உள்வாங்கப்பட்டுள்ளமை குறித்து டுவிட்டர் பதிவொன்றின் ஊடாக  வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ள நிஷா தேசாய் பிஸ்வால், அதிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 13ஆம் திகதி நடைபெற்ற மிலேனிய சவால்களுக்கான ஒத்துழைப்பு அமைப்பின் பணிப்பாளர் சபையின் சந்திப்பில் இலங்கை, புர்கினோ ஃபசோ மற்றும் ரியூனியா ஆகிய நாடுகள், இந்த ஊக்குவிப்பு திட்டத்திற்கென தெரிவுசெய்யப்பட்டிருந்தன.

இலங்கை மக்களுடனான ஆறு தசாப்த அபிவிருத்தி பங்களிப்புக்கு பாரிய உந்துசக்தியாக, மிலேனிய சவால்களுக்கான ஒத்துழைப்பு அமைப்பு குறிப்பிடத்தக்க ஆதரவை வழங்கியுள்ள தாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அத்துல் கேஷப் தெரிவித்துள்ளார்.

மிலேனிய சவால்களுக்கான ஒத்துழைப்பு அமைப்பின் உதவியை பெறுகின்ற நாடாக இலங்கை தெரிவுசெய்யப்பட்டதன் அடிப்படையில், ஜனநாயக ஆட்சி, மக்களுக்கான முதலீடு மற்றும் பொருளாதார சுதந்திரம் ஆகியவற்றுக்கான அர்ப்பணிப்பை நிரூபிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

0 Responses to இலங்கையில் சொல்லிக் கொள்ளக் கூடிய முன்னேற்றம்: நிஷா தேசாய் பிஸ்வால்

Post a Comment

Followers