Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதா கர்நாடகாவில் உள்ள மாண்டியா மாவட்டத்தில், பாண்டவபுரா தாலுகாவில், மேல்கோட்டை ஊரில் ஜெயராம் – வேதவல்லி இணையரின் மகளாக 24 பிப்ரவரி 1948ஆம் நாள் பிறந்தார்.

பெங்களூரில் ஜெயலலிதா பிஷப் கார்ட்டன் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் படித்தார். சென்னைக்கு வந்த பின்னர், 1958-ஆம் ஆண்டு முதல் 1964ஆம் ஆண்டு வரை சர்ச் பார்க் ப்ரேசெண்டேஷன் கான்வென்ட்டில் படித்து மெட்ரிக் தேறினார். ஸ்ரீதர் இயக்கிய வெண்ணிற ஆடை என்கிற படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார்..

ஜெயலலிதா 127 திரைப்படங்களில் நடித்திருக்கிருக்கும் ஜெயலலிதா எம்.ஜி.ஆருடன் 28 படங்களில் இணைந்து நடித்திருக்கிறார்.

1981ல் அ.தி.முக. வில் இணைந்து, அக்கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் ஆனார். அதன் பிறகு 1984ஆம் ஆண்டு நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரானார். எம் ஜி ஆரின் மறைவுக்குப் பின் அதிமுக ஜானகி அணி, ஜெயல்லிதா அணி என் இரண்டாக பிரிந்தது. தேர்தல் தோல்விக்கு பின் 1989 ஆவது ஆண்டில் அ. தி. மு. கவின் தலைமைப் பொறுப்பேற்று அதன் பொதுச்செயலாளர் ஆனார்.

இவர் தமிழக முதலமைச்சராக 1991 முதல் 1996 வரையும், 2001 ஆம் ஆண்டில் சில மாதங்களும், பின்னர் 2002 முதல் 2006 வரையும், 2011 முதல் 2014 வரையும் இருந்தார். 2015 மே 23 அன்று மீண்டும் முதலமைச்சராக பதவியேற்றார். 2016 இல் நடந்த சட்டசபை தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தார். எம் ஜி ஆருக்கு பிறகு தொடர்ந்து இரண்டு முறை முதல்வராக பதவி ஏற்றிருக்கிறார்.

1991 முதல் 1996 வரையிலான ஆட்சியின் மீது பல ஊழல் வழக்குகளும், வளர்ப்பு மகன் திருமணம் என குற்றசாட்டுகளும் முன் வைக்கப்பட்டன, அதற்கான வழக்குகளை அவர் இன்னும் எதிர்கொள்கிறார்.

கொடைக்கானலில் கட்டிட விதிகளை மீறி, ஐந்து மாடிகள் உடைய நட்சத்திர விடுதி கட்டிக்கொள்ள பணம் பெற்றுக்கொண்டு அனுமதி அளித்ததாகக் தொடரப்பட்ட வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கை விசாரித்த நீதிபதி ராதாகிருஷ்ணன், முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருந்த ஜெயலலிதாவிற்கு ஓராண்டு கடுங்காவல் தண்டனையும், 1,000 ரூபாய் அபராதமும் விதித்தார்.

அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த அன்றைய அமைச்சர் செல்வகணபதி, அதிகாரி பாண்டே, விடுதி இயக்குநர் ராகேஷ் மிட்டல், விடுதியின் சேர்மன் பாளை சண்முகம் ஆகியோருக்கு ஒன்றரை ஆண்டு கடுங்காவல் தண்டனையும் விதித்தார். 2000-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ஆம் நாள் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது.

2000-ஆம் ஆண்டு சிறப்பு நீதிமன்றம் ஜெயலலிதாவிற்குச் சிறைத் தண்டனை விதித்த செய்தி வெளியானதும், அதிமுகவினர் தமிழகம் முழுவதும் ரகளையில் ஈடுபட்டனர். அச்சமயம் தர்மபுரி மாவட்டத்திற்கு கல்விச் சுற்றுலா சென்றிருந்த கோவை வேளாண்மைக் கல்லூரி மாணவர்கள் பயணித்த பேருந்து மறிக்கப்பட்டு பேருந்துக்குள் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. அந்தச் சம்பவத்தில் காயத்ரி, கோகில வாணி, ஹேமலதா என்ற மூன்று பெண்கள் உயிரோடு எரிக்கப்பட்டு இறந்து போயினர்.

ஜெயலலிதா முதல் முறையாக தமிழக முதல்வராக இருந்த (1991-1996) போது பெண்களுக்கெதிரான குற்றங்களைக் கட்டுப்படுத்தவும், வரதட்சணைக் கொடுமையை ஒழிக்கவும் பெண் காவலர்கள் மட்டுமே பணியாற்றும் அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் தமிழ்நாடு முழுவதும் தொடங்கப்பட்டன. பின்னர் ஜெயலலிதா முதல்வராக (2003-2006) இருந்த போது பெண்கள் மட்டுமே உள்ள சிறப்பு பெண்கள் ஆயுதப்படை தொடங்கப்பட்டது. அதேபோல 1992 ஆம் ஆண்டில் இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டது. முதன்முதலாக சேலம் மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட இத்திட்டம், 2001 ஆம் ஆண்டில் மதுரை, தேனி, திண்டுக்கல் மற்றும் தருமபுரி மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது.

தமிழ்நாட்டில் 2001 ஆம் ஆண்டில் 1000 குழந்தைகளுக்கு 942 பெண் குழந்தைகள் என இருந்த பாலின சதவிகிதம் 2011 ஆம் ஆண்டில் 946 ஆக அதிகரித்துள்ளது. தொட்டில் குழந்தைத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட சேலம், மதுரை, திண்டுக்கல், தேனி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் பெண் குழந்தை விகிதங்கள் அதிகரித்துள்ளது.

2011 ஆம் ஆண்டு மிண்டும் ஜெயல்லிதா முதல்வராக வந்த பின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் தமிழ்நாட்டில் பெண் குழந்தைகள் விகிதம் குறைந்துள்ள கடலூர், அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 5 மாவட்டங்களுக்கு தொட்டில் குழந்தைத் திட்டம் விரிவாக்கம் செய்திட தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

2004 ஆம் ஆண்டு நவம்பர் 11 ஆம் தேதி ஜெயலலிதா முதல்வராகவும் காவல்துறை அமைச்சராகவும் இருந்த போது இந்தியாவின் எல்லா அதிகார மையங்களோடு குடியரசு தலைவர் அமைச்சர்கள் வரை வந்து சந்தித்து செல்லும் அதிகாரோத்தோடு இருந்த காஞ்சுபுரம் ஜெயேந்திரை சங்கர்ராமன் கொலை வழக்கில் கைது செய்தது மிக துணிச்சலான முடிவாக கருதப்படுகிறது.

தமிழகத்தில் தொடர்ந்து இடஒதிக்கீட்டிற்கான போராட்டங்கள் நடத்தி இந்தியாவில் தமிழகத்தில் மட்டும் தான் 69 சதவித இடஒதிக்கீடு இருக்கிறது.

50 சதவித்திற்கு மேல் இட ஒதிக்கீடு இருக்ககூடாது என உச்சநீதி மன்றம் தீர்ப்பு கொண்டு வந்தபோது 69 விழுக்காடு இட ஒதுக்கீடு முறையைப் பாதுகாத்திட 1993 ஆம் ஆண்டு, ஜெயலலிதா அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, அரசியல் சட்டத்தின் 31சி பிரிவின் கீழ் சட்டம் கொண்டு வந்தது. பின்னர் மத்திய அரசு இதனை அரசியல் சட்டத்தின் 9ஆவது அட்டவணையில் சேர்த்து இதுவும் இவரின் அரசியல் வாழ்வில் முக்கியமானதாக கருதப்படுகிறது.

தமிழக சட்டமன்றத்தில் தமிழீழ இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரனை வேண்டும் என்றும் இலங்கையின் மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறை வேற்றியது, பேரறிவாளன், முருகன் சாந்தனின் மரணதண்டனைக்கு எதிரான தீர்மானம் உள்ளிட்டவை ஜெயல்லிதாவின் முந்தைய அரசின் முக்கிய முடிவுகளாக தமிழக மக்கள் கருதுகிறார்கள்.

0 Responses to முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்வும் அரசியலும்..

Post a Comment

Followers