Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நைஜீரியாவின் வடகிழக்கே அமைந்துள்ள மடகலி என்ற மிக நெருக்கடியான சந்தை ஒன்றில் வெள்ளிக்கிழமை காலை இரு பெண் தற்கொலைக் குண்டுதாரிகள் நிகழ்த்திய குண்டு வெடிப்புத் தாக்குதலில் 45 பேர் கொல்லப் பட்டும் மேலும் 33 பேர் படுகாயம் அடைந்தும் உள்ளனர்.

இத்தகவலை நைஜீரியாவின் தேசிய அவசரகால அமைப்பான NEMA உறுதிப் படுத்தியுள்ளது. இப்பகுதியில் சுமார் 7 வருடங்களுக்கும் அதிகமாக ஆதிக்கம் செலுத்தி வரும் போக்கோ ஹராம் என்ற தீவிரவாத அமைப்பு இத்தற்கொலைத் தாக்குதலுக்கு பொறுப்பாக இருக்கலாம் என சந்தேகிக்கப் படுகின்றது. இத்தற்கொலைத் தாக்குதலை நைஜீரியாவின் அதிபரான முஹம்மது புஹாரி வன்மையாகக் கண்டித்துள்ளார்.

இதேவேளை தெற்கு யேமெனில் உள்ள இராணுவ முகாம் ஒன்றின் மீது தற்கொலைக் குண்டுதாரி ஒருவர் நிகழ்த்திய குண்டுத் தாக்குதலில் குறைந்தது 35 படையினர் கொல்லப் பட்டிருப்பதாகவும் பலர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தெரிய வருகின்றது. ஆடென் நகரில் அமைந்துள்ள இந்த முகாமில் தமது சம்பளத்தைப் பெறுவதற்காக யேமென் படை வீரர்கள் குழுமியிருந்த போது இந்தத் தாக்குதல் நிகழ்த்தப் பட்டுள்ளது.

இந்தத் தற்கொலைத் தாக்குதலுக்கு யாரும் பொறுப்பேற்காத நிலையில் யேமெனில் இயங்கி வரும் ISIS இயக்கத்துடன் தொடர்புடைய அல்கொய்தா பிரிவு இதன் பின்னணியில் இருக்கலாம் என சந்தேகிக்கப் படுகின்றது. யேமெனில் உள்நாட்டுப் போர் காரணமாக இதுவரை 7240 பொது மக்கள் கொல்லப் பட்டுள்ளதாக ஐ.நா அறிவித்துள்ளது.

0 Responses to நைஜீரியா மற்றும் யேமெனில் தற்கொலைத் தாக்குதல் : பலர் பலி

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.

அதிகமாக வாசிக்கபட்டவை...