Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மாகாண சபைகள் தோற்கடித்தாலும் அபிவிருத்தி (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலத்தினை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்று ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.

ஐ.தே.க தலைமையகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அந்தக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார இதனைத் தெரிவித்துள்ளார்.

குறித்த சட்ட வரைபு மாகாண சபைகளில் தோற்கடிக்கப்பட்டமை தொடர்பில் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துக் கலந்துரையாடவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அபிவிருத்தி (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் மாகாண சபைகளின் கருத்துக்களை அறிவதற்காக அனுப்பிவைக்கப்பட்டிருந்தாலும், மத்திய அரசாங்கம் இதனை நிறைவேற்றுவதற்கு மாகாண சபைகளின் கருத்துக்கள் அவசியமில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

நளின் பண்டார மேலும் தெரிவித்துள்ளதாவது, "குறித்த சட்டமூலமானது 'சுப்பர் அமைச்சர்' ஒருவரை உருவாக்காது. ஆனால் முதலீட்டுத் திட்டங்களை முன்னெடுப்பதற்கு இலகுவான சூழ்நிலையொன்றை ஏற்படுத்திக் கொடுக்கும். மஹாவலி திட்டம், கல் ஓயா திட்டம் மற்றும் கொழும்பு பெரும்பாக பொருளாதார ஆணைக்குழு ஆகிய திட்டங்களை முன்னெடுப்பதற்கும் இதுபோன்ற சட்டமூலம் கொண்டுவரப்பட்டிருந்தது.

நாட்டில் அபிவிருத்தி செயற்பாடுகளை முன்னெடுப்பதில் தமது ஒத்துழைப்பை வழங்க மாகாண சபைகள் விரும்பவில்லையாயின். மத்திய அரசாங்கம் நேரடியாக இதனை அமுல்படுத்தும்.

தற்பொழுது விவாதத்துக்கு உள்ளாகிவரும் சட்டமூலம் பாராளுமன்றத்திற்கு கொண்டுவரப்படும்போது அதில் திருத்தங்களை உள் வாங்குவதற்கு அரசாங்கம் தயாராக உள்ளது.

முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான 'வொல்க்ஸ்வகன்' தொழிற்சாலை உட்பட மூன்று பாரிய தொழிற்சாலைகள் அடுத்த வருட ஜனவரியில் ஆரம்பிக்கப்படவுள்ளன. இவ்வாறான திட்டங்களை கொண்டுவருவதற்கும் அவற்றை அமுல்படுத்துவதற்கும் நாட்டில் சட்டங்களில் திருத்தங்களைக் கொண்டுவருவது அவசியமானது.” என்றுள்ளார்.

0 Responses to மாகாண சபைகள் தோற்கடித்தாலும் அபிவிருத்தி (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் நிறைவேற்றப்படும்: ஐ.தே.க

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...