Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்பதை சகலரும் ஏற்றுக் கொண்டுள்ளனர். அதன் ஒரு அங்கமாகவே காணிகளை விடுவித்து அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து வருகின்றோம் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

“நாம் அனைவரும் தேசப்பற்றாளர்கள். அனைவரும் தேசியவாதிகள் என்பதால் நாடு பிளவுபடப்போவதாக கண்ணீர்வடிக்கும் தேசியவாதிகளை கையாள்வதில் எந்தப் பிரச்சினையும் இல்லை” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் ‘தி ஹிந்து’ பத்திரிகைக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “நாடு பிளவுபடப்போகிறது என கண்ணீர்வடிக்கும் தேசியவாதிகள் எனக் கூறிக்கொள்ளும் நபர்களை மக்கள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. அரசியலமைப்பு தயாரிப்பின்போது சகல மக்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையிலேயே ஆட்சிமுறை மற்றும் ஏனைய விடயங்கள் அமையும்.

அரசியலமைப்பை தயாரிக்கும் செயற்பாடுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சாதகமாகவும், மிகவும் ஆக்கபூர்வமான வகையிலும் பங்களிப்புச் செலுத்தி வருவதாகச் சுட்டிக்காட்டிய பிரதமர், 1987ஆம் ஆண்டு அரசியலமைப்பை தயாரிக்கும் குழுவில் இருந்தவன் என்ற ரீதியில் முதல் தடவையாக இம்முறையே சகல தரப்பினரையும் உள்ளடக்கியதாக அரசியலமைப்பைத் தயாரிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

எந்தவொரு கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை இல்லை என்பதால் மூன்றில் இரண்டு பற்றிப் பேசாது அரசியலமைப்பை தயாரிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் செய்துகொள்ளப்படவிருக்கும் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் மற்றும் மீனவர் பிரச்சினை உள்ளிட்ட விடயங்களைத் தீர்ப்பதற்கு எதிர்பார்த்துள்ளோம். குறிப்பாக மீனவர் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்.

எட்கா ஒப்பந்தம் தொடர்பில் இணங்கப்படாத விடயங்கள் சில இருக்கின்றன. இவற்றை படிப்படியாகத் தீர்ப்பதற்கு எதிர்பார்த்துள்ளோம். 2016ற்குள் இதனை உறுதிப்படுத்த விரும்பினோம். ஏனெனில், 2017ஆம் ஆண்டு ஆரம்பத்தில் சீனா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளன. எனவே, இந்தியாவுடனான ஒப்பந்தம் விரைவுபடுத்தப்பட வேண்டும் என விரும்புகிறோம். இந்தியாவுடனான ஒப்பந்தமானது முத்தரப்பைக் கொண்டது.

2017ஆம் ஆண்டு கைச்சாத்திடப்படவிருக்கும் இலங்கை, இந்தியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய முத்தரப்பு ஒப்பந்தமானது வங்காள விரிகுடா பிராந்தியத்தில் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கு உந்துசக்தியாக அமையும்.” என்றுள்ளார்.

0 Responses to ‘காணி விடுவிப்பு’ தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளின் தீர்வுக்கான ஒரு அங்கமே: ரணில்

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.