Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சுமார் 70 வருடங்களாக ஜப்பானுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே நிலவி வரும் பிராந்திய எல்லை சர்ச்சை தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினும் ஜப்பான் பிரதமர் சின்ஷோ அபே உம் வியாழக்கிழமை மேற்கு ஜப்பானின் நகாட்டோவில் உள்ள ஹாட் ஸ்பிரிங் விடுதி ஒன்றில் சந்தித்துள்ளனர்.

2014 ஆம் ஆண்டு உக்ரைனின் கிரிமியா பகுதியைத் தன்னுடன் இணைத்துக் கொண்டதால் சர்வதேசத்தின் எதிர்ப்பை சம்பாதித்துக் கொண்டிருந்த ரஷ்யா அதன் பிறகு G7 நாடு ஒன்றுக்கு மேற்கொண்ட முதலாவது உத்தியோகபூர்வ விஜயம் இதுவாகும். இச்சந்திப்பின் முன்னர் செய்தியாளர் மாநாட்டில் பேட்டியளித்த புட்டின் ரஷ்ய ஜப்பானிய உறவில் போதிய கவனம் எடுத்து வரும் அபே இனது முயற்சிகளைப் பாராட்டிப் பேசினார். சுமார் இரு நாட்களாக நீடிக்கவுள்ள இந்தப் பேச்சுவார்த்தையில் ஜப்பான் ரஷ்ய பிராந்திய விவகாரம் மட்டுமன்றி பொருளாதார செயற்திட்டங்கள் குறித்தும் பேசப்படவுள்ளது.

G7 நாடுகளில் அங்கத்துவம் வகிக்கும் ஜப்பான் கூட கிரிமியா விவகாரத்தால் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகள் சில விதித்துள்ள போதும் அபே புட்டினுக்கு அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 2 ஆவது நாள் பேச்சுவார்த்தை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறும் என அறிவிக்கப் பட்டுள்ளது. 2 ஆம் உலக மகா யுத்தத்தின் முடிவின் போது ஜப்பான் சரணடையும் தருவாயில் அதன் வடக்கேயுள்ள 4 தெற்கு குரில் தீவுகளை ரஷ்யா சட்டத்துக்குப் புறம்பாகக் கைப்பற்றியதுடன் அங்கிருந்த 17  000 ஜப்பானியர்களை அண்மையில் இருந்த ஹொக்காயிடோ இற்கு விரட்டி அடித்தும் இருந்தது. அன்று தொடக்கம் ஜப்பானின் வடக்கே உள்ள இத்தீவுப் பகுதிகளில் ரஷ்யாவுக்கும் ஜப்பானுக்கும் இடையே சர்ச்சை இருந்து வருகின்றது.

இந்நிலையில் ரஷ்யாவுடனான உறுதியான பொருளாதார செயற்திட்டங்கள் காலப் போக்கில் இந்த பிராந்திய விவகாரத்திலும் செல்வாக்கு செலுத்தி அதற்குப் படிப்படியாக ஒரு தீர்வைத் தரக் கூடும் என ஜப்பான் எதிர்பார்ப்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to ஜப்பான் ரஷ்யா பிராந்திய விவகாரம் தொடர்பில் விளாடிமிர் புட்டின் மற்றும் சின்ஷோ அபே சந்திப்பு

Post a Comment

Followers