Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழக மக்களால் ‘அம்மா’ என்று அழைக்கப்பட்ட ஜெயலலிதா ஜெயராம், ஒரு  உண்மையான தலைவர் என்று இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராம் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை மறைந்ததை அடுத்து  ஜனாதிபதி வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அனுதாபச் செய்தியில் கூறியுள்ளதாவது, “தமிழ்நாடு மாநிலத்தின் கௌரவ முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஜெயராம் அவர்களின் மறைவுச் செய்தி அறிந்து ஆழ்ந்த கவலையடைகின்றேன்.

கௌரவ முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள், தான் பிரதிநிதித்துவம் செய்த மக்களின் நலனுக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டவர் என்பதுடன் அவரது ஆதரவாளர்கள் அவரை பெரிதும் நேசித்தார்கள் என்பது உண்மையாகும்.

கௌரவ ஜெயலலிதா இந்திய அரசியலில் ஒரு பெரும் தூணாக இருந்ததுடன் ஐந்து முறை தமிழ்நாடு மாநிலத்தின் முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்டவராவார்.

கௌரவ ஜெயலலிதா அவர்களின் மறைவினால், இந்தியா அதன் முன்னணி பெண் அரசியல்வாதியை இழந்து நிற்பதுடன், 'அம்மா' என மக்கள் அன்புடன் அழைத்த, அம்மக்களை உண்மையாகவே ஆதரித்து வந்த ஒரு தலைவரை இழந்து நிற்கிறது. இந்த சோகமான தருணத்தில் நாமும் அம்மக்களின் உணர்வுகளுடன் ஐக்கியப்படுகின்றோம்.” என்றுள்ளது.

0 Responses to முதலமைச்சர் ஜெயலலிதா ஒரு உண்மையான தலைவர்: இலங்கை ஜனாதிபதி

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.

அதிகமாக வாசிக்கபட்டவை...