Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை நாரந்தனைப் பகுதியில் 2001ஆம் ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு, இருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட மூன்று பேருக்கு இரட்டை மரணதண்டனை விதித்து யாழ். மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

குறித்த வழக்கு தொடர்பான விசாரணை யாழ். மேல் நீதிமன்றத்தில் இன்று புதன்கிழமை விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதிபதி மா.இளஞ்செழியன் மேற்கண்ட தீர்ப்பை வழங்கினார்.

குற்றவாளிகள் மூவருக்கும் 20 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன், குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய ஐவருக்கும் தலா ஒரு இலட்சம் தண்டப் பணம் விதிக்கப்பட்டுள்ளது. தண்டப்பணத்தை செலுத்த தவறும் பட்சத்தில் 5 வருட சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை பிரதேசத்தில் கடந்த 2001ஆம் ஆண்டு தேர்தல் பிரசாரத்திற்காக சென்ற தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டதுடன் 20 பேர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த தாக்குதல் சம்பவத்துடன் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியினர் (ஈபிடிபி) சம்பந்தப்பட்டதாக நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட சாட்சியங்களில் தெரிவிக்கப்பட்டது.

0 Responses to ஊர்காவற்துறை இருவர் படுகொலை வழக்கு; மூவருக்கு மரணத் தண்டனை!

Post a Comment

Followers