Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சிரிய அரசாங்கமும் கிளர்ச்சிக் குழுவும் யுத்த நிறுத்தத்துக்கு உடன் பட்டிருப்பதாகவும் சமாதானப் பேச்சுவார்த்தையை விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாகவும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் அறிவித்துள்ளார். இன்று வியாழக்கிழமை டிசம்பர் 29 நள்ளிரவு முதல் சிரியாவில் யுத்த நிறுத்தம் அமுலுக்கு வரும் என அறிவிக்கப் பட்டுள்ளது.

மேலும் சிரியாவில் தனது இராணுவப் பிரசன்னைத்தைக் குறைப்பதற்கும் ரஷ்யா உடன்பட்டிருப்பதாக புட்டின் அறிவித்துள்ளார். சுமார் 6 வருடங்கள் நீடித்த சிரிய யுத்தம் முடிவுக்கு வருவதற்கான சமாதான ஒப்பந்தத்துக்கு ஈரானும் துருக்கியும் இணைந்து உடன்பட்டுள்ளன. சிரிய இராணுவமும் தேசியளவான யுத்த நிறுத்தத்தை அறிவித்துள்ள போதும் இஸ்லாமிய தேசப் போராளிகளும் அவர்களுடன் தொடர்புடைய முன்னால் நுஸ்ரா ஃப்ராண்ட் ஆயுதக் குழுக்கள் போன்ற போராளிக் குழுக்களும் சமாதான உடன்பாட்டில் உள்ளடக்கப் பட மாட்டார்கள் எனத் தெரிவித்துள்ளது. இவ்வாறு உள்ளடக்கப் படாத ஏனைய குழுக்களின் பெயர் விபரங்களை சிரிய அரசு வெளியிடவில்லை.

ராய்ட்டர்ஸ் செய்தி ஊடகத்துக்கு பல கிளர்ச்சிக் குழுக்கள் அளித்த தகவலில் தாம் யுத்த நிறுத்த கோரிக்கைக்கு  உடன்பட்டிருப்பதாகவும் ஆனால் எத்தனை குழுக்கள் இதில் உள்ளடக்கப் படுவர் என்ற தெளிவற்ற தன்மை நிலவுவதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் சிரிய எதிரணிக் குழுக்களும் சிரிய அரசும் சில குறிப்பிடத்தக்க ஆவணங்களில் கைச்சாத்திட்டுள்ளதாகவும் டிசம்பர் 29 - 30 நள்ளிரவில் யுத்த நிறுத்தம் செயற்படுத்தப் படும் எனவும் புட்டின் தெரிவித்துள்ளார். ஆயினும் ரஷ்யாவின் முக்கிய நட்பு நாடான அமெரிக்கா குறித்த யுத்த நிறுத்தத்தை வரவேற்றுள்ள போதும் கஷகஸ்தானின் தலைநகர் அஸ்தானாவில் நடைபெறவுள்ள அடுத்த கட்ட சமாதானப் பேச்சுவார்த்தைகளில் அது பங்கேற்கும் திட்டத்தில் இல்லை எனத் தெரிவித்துள்ளது.

ஆனால் அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டால் அவர் தலைமையில் அமெரிக்கா சமாதானப் பேச்சுவார்த்தையில் பங்கேற்க முடியும் என ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கெய் லவ்ரோவ் தெரிவித்துள்ளார்.

0 Responses to வியாழன் நள்ளிரவு முதல் சிரியாவில் ரஷ்யா யுத்த நிறுத்த அறிவிப்பு

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...