Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவை அடுத்து உடனடியாக ராஜ் பவானின் புதிய முதலமைச்சராக 65 வயதான ஓ.பன்னீர்செல்வம் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

இந்த அறிவிப்பு எவரையும் ஆச்சரியப்படுத்தவில்லை. ஜெயயலிதாவின் மிகுந்த விசுவாசத்திற்கு உரியவரும் நம்பிக்கைக்கு உரியவருமாக விளங்கிய ஓ பன்னீர் செல்வம், இவ்வாறு தமிழ்நாட்டின் முதலமைச்சராவது முதற்தடவையும் அல்ல.

முதன்முறையாக 2001 செப்டெம்பர் மாதம், உச்சநீதமன்றம் நில ஆக்கிரமிப்பு வழக்கு ஒன்றில் ஜெயயலிதாவின் முதலமைச்சர் பதவியை இரத்து செய்த போது ஆறு மாதத்திற்கு இடைக்கால முதலமைச்சராக பதவி வகித்தவர் இவர். இரண்டாவது முறையாக கடந்த 2014 செப்டெம்பர் மாதம் பெங்களூர் நீதிமன்றம், 100 கோடி ரூபாய் சொத்துக்குவிப்பு மோசடி வழக்கில் ஜெயயலிதாவுக்கு நான்கு வருட சிறைத்தண்டனை வழங்கிய போது, இடைக்கால முதலமைச்சராக பதவியேற்றார்.

பின்னர் கடந்த செப்டெம்பர் 22ம் திகதி  தொடக்கம் ஜெயயலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தலைமை பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டார். ஆக மொத்தத்தில் இது மூன்றாவது/நான்காவது முறை.

தேவர் சமூகத்தைச் சேர்ந்த ஏழ்மையான விவசாயி ஒருவரின் மகனான பன்னீர் செல்வம், அவருடைய பணிவடக்கத்தால் புகழடைந்தவர் என்கிறது ஜெயயலிதா குறித்த சுயசரிதைப் புத்தகம்.

1970ம் ஆண்டு தனது நண்பன் விஜயனுடன் தேனீர்க் கடை வைத்திருந்த பன்னீர் செல்வம் ஒரு தசாப்த காலத்திற்கு பிறகு அக்கடையை தனது சகோதரரிடம் கொடுத்து விட்டு அரசியலுக்குள் நுழைந்தார். 1996ம் ஆண்டு தேனீ மாவட்டத்தின்  பெரியங்குளம் மாநகராட்சியின் பொறுப்பாளர் ஆனார்.

ஜெயலலிதாவின் மிக நம்பிக்கைக்குரிய விசுவாசத்திற்குரியவர்களில் ஒருவரான பன்னீர்செல்வம் ஜெயயலிதா மீது அளவு கடந்த மரியாதை வைத்திருப்பவர். முதன்முதலாக பதவியேற்பின் போது ஜெயலலிதாவிடம் வீழ்ந்து வணங்கியதிலிருந்து, ஒவ்வொரு மேடையிலும் தலைமையிடம் காண்பிக்கும் அன்பும், மரியாதையும் அவர் மீதான எதிர்விமர்சனங்களையும் ஏற்படுத்தியிருந்தன.

0 Responses to தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சரான ஓ.பன்னீர் செல்வம் - ஒரு பார்வை

Post a Comment

Followers