Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராமின் மறைவையொட்டி மத்திய அரசின் சார்பில் இன்று செவ்வாய்க்கிழமை ஒருநாள் துக்கம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

மத்திய அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களிலும் ஏற்றப்பட்டுள்ள தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும், மத்திய அரசு சார்பு விழாக்கள் எதுவும் இன்று நடைபெறாது என்றும் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் நேற்று திங்கட்கிழமை இரவு மரணமானார். அவரின் உடல் தற்போது சென்னை ராஜாஜி மண்டபத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 04.00 மணியளவில் சென்னை மெரீனா  கடற்கரையில் அமைந்துள்ள முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். சமாதிக்கு அருகில் அவரது உடல் அடக்கம் செய்யப்படவுள்ளது.

0 Responses to முதல்வர் ஜெயலலிதாவின் மறைவையொட்டி மத்திய அரசின் சார்பில் ஒருநாள் துக்கம் அனுஷ்டிப்பு!

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.