Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

யேமெனின் தெற்கே உள்ள துறைமுக நகரான ஆடெனில் ஞாயிற்றுக்கிழமை காலை தற்கொலைக் குண்டுதாரி ஒருவர் இராணுவ முகாம் ஒன்றிட்கு அருகே நிகழ்த்திய குண்டுத் தாக்குதலில் குறைந்தது 48 படையினர் கொல்லப் பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் அறிவித்துள்ள நிலையில் யேமெனைத் தளமாகக் கொண்டு இயங்கும் இஸ்லாமிய தேசக் குழு இத்தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளது.

மேலும் இத்தாக்குதலில் 84 பேர் வரை படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிய வருகின்றது. படை வீரர்கள் தமது மாதாந்த சம்பளத்தைப் பெறுவதற்காக அணிவகுத்து நின்ற வேளையில் இத்தாக்குதல் நிகழ்த்தப் பட்டுள்ளது. டிசம்பர் 10 ஆம் திகதி இதே இராணுவத் தளத்தின் மீது தொடுக்கப் பட்ட தற்கொலைத் தாக்குதலில் 57 படை வீரர்கள் கொல்லப் பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதேவேளை சனிக்கிழமை துருக்கியின் மத்திய பகுதியில் இராணுவ வீரர்களை ஏற்றிச் சென்ற பஸ் வண்டி மீது வெடிகுண்டு நிரப்பிய கார் மோதி நிகழ்த்தப் பட்ட தாக்குதலில் 13 இராணுவத்தினர் பலியானதுடன் 48 பேர் வரை படுகாயம் அடைந்தனர். குறித்த இராணுவ வீரர்கள் பயிற்சி வீரர்கள் எனவும் உள்ளூர் சந்தை ஒன்றில் பொருட்கள் வாங்க இவர்கள் சென்ற போது தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர் என்றும் துருக்கி இராணுவம் தெரிவித்துள்ளது.

டிசம்பர் 10 ஆம் திகதி துருக்கியின் கால் பந்தாட்ட மைதானத்தில் குர்து இனப் போராளிகள் நடத்திய வெடிகுண்டுத் தாக்குதலில் 44 பேர் பலியாகி இருந்தனர். துருக்கியில் அந்நாட்டு அரசுக்கு எதிராக குர்துப் போராளிகளும் ஜிஹாதிஸ்ட் குழுக்களும் தொடர்ச்சியாகத் தாக்குதல்கள் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

0 Responses to யேமெனிலும் துருக்கியிலும் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்: பலர் பலி

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.