Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

உத்தேச அபிவிருத்தி விசேட ஒழுங்கு விதிச் சட்டமூலம் தொடர்பில் மாகாண முதலமைச்சர்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று வெள்ளிக்கிழமை ஒழுங்கு செய்துள்ள கூட்டத்திற்கு, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அழைக்கப்படவில்லை.

இந்நிலையில், குறித்த சந்திப்பில் வடக்கு மாகாண முதலமைச்சர் பங்கேற்பது குறித்து வினவியபோது, தனக்கு அவ்வாறான சந்திப்பு குறித்து எவ்விதமான அறிவித்தலும் கிடைக்கவில்லை. அவ்வாறிருக்கையில் எவ்வாறு பங்கேற்பது என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

வடக்கு மாகாண சபையில் 2017ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்ட அமர்வுகள் இடம்பெற்று வரும் நிலையில், இன்றைய தினம் சுகாதார அமைச்சுக்கான விவாதம் இடம்பெறவுள்ளது.

இதேவேளை, முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மாவட்ட அபிவிருத்திக் கூட்டங்களைக் கூட தவிர்த்து மாகாண சபை அமர்வுகளில் பங்கேற்று வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

0 Responses to முதலமைச்சர்களுடன் பிரதமர் இன்று சந்திப்பு; சி.வி.விக்னேஸ்வரனுக்கு அழைப்பில்லை!

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.