Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஆக்டோபரில் மியான்மார் எல்லைப் பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் தொடுத்த சிறுபான்மை முஸ்லிம் போராளிகளுக்கு சவுதி அரேபியா மற்றும் பாகிஸ்தான் அதிகாரிகளிடம் இருந்து உதவி கிடைத்ததாக சர்வதேச சர்ச்சைக் குழுவான ICG வியாழக்கிழமை குற்றம் சாட்டியுள்ளது.

ஆக்டோபர் 9 ஆம் திகதி றோஹிங்கியா முஸ்லிம் போராளிகளால் திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப் பட்ட தாக்குதலில் 9 போலிசார்கள் கொல்லப் பட்டிருந்தனர். இதை அடுத்து மியான்மாரின் வடமேற்கே றோஹிங்கியா முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் ராக்கைன் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினரால் அடக்கு முறை பிரயோகிக்கப் பட்டது. இதனால் குறைந்த பட்சம் 86 பொது மக்கள் கொல்லப் பட்டதுடன் ஐ.நா இன் கணிப்புப் படி சுமார் 27 000 றோஹிங்கியா முஸ்லிம்கள் எல்லையைத் தாண்டி பங்களாதேஷுக்கு தஞ்சமடைந்துள்ளனர்.

ஆக்டோபர் தாக்குதலில் றோஹிங்கியா போராளிகளுக்கு வெளிநாட்டுப் போராளிகளின் உதவி கிடைத்ததாகப் பகிரங்கமாக சாடியுள்ளார் மியான்மாரின் அரச தலைவரும் சமாதானத்துக்கான நோபல் பரிசை வென்றவருமான ஆங் சான் சூ கிய். பௌத்தப் பெரும்பான்மையைக் கொண்டுள்ள மியான்மார் அரசும் குறித்த றோஹிங்கியா போராளிகளைத் தீவிரவாதிகள் என அடையாளம் செய்துள்ளது.

இதேவேளை 2012 ஆம் ஆண்டு மியான்மாரின் இரு  சமூகங்களுக்கும் இடையே மூண்ட வன்முறையில் 100 இற்கும் அதிகமான றோஹிங்கியா மக்கள் கொல்லப் பட்டும் 140 000 பேருக்கும் அதிகமானவர்கள் ராக்கைன் மாநிலத்தில் இடம்பெயர்ந்தும் இருந்தனர். இதை அடுத்து உருவான ஹரக்காஹ் அல் யாக்கின் என்ற அமைப்பே ஆக்டோபர் தாக்குதலுக்கும் பொறுப்பேற்று இருந்தது. இதனை புருஸ்ஸெல்ஸை தளமாகக் கொண்டு இயங்கும் ICG அமைப்பு உறுதி செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

0 Responses to மியான்மார் றோஹிங்கியா போராளிகளுக்கு பாகிஸ்தானுடனும் சவுதியுடனும் தொடர்பு : ICG குற்றச்சாட்டு

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.