Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

டிரம்ப் பதவியேற்ற பின் அவரது அலுவலக முதல் நாளான நேற்று சனிக்கிழமை பெண்களுக்கும் சிறுபான்மையினருக்கும் உரிமையை வலியுறுத்தக் கூடிய கிட்டத்தட்ட 1/2 மில்லியன் பொது மக்கள் வாஷிங்டனில் ஒன்று கூடி அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

இந்த மிகப்பெரிய பேரணி பெண்கள் அமைப்புக்கள் மற்றும் ஆர்வலர்களை மிகப்பெரிய அளவில் ஒன்று திரட்டி அவர்களை அமெரிக்காவில் பெண்ணியம் மற்றும் சிறுபான்மை மக்களுக்கு ஆதரவாகப் பலரை இணைக்கக் கூடும் என்று எதிர் பார்க்கப் படுகின்றது. வாஷிங்டனில் மட்டுமல்லாது அமெரிக்காவின் ஏனைய முக்கிய நகரங்கள் சிலவற்றிலும் சிறியளவிலான பேரணிகள் மேற் கொள்ளப் பட்டுள்ளன. இந்த ஆர்ப்பாட்டம் குறித்துக் கருத்துத் தெரிவித்த அமெரிக்கக் காங்கிரஸ் உறுப்பினரான அல்மா அடம்ஸ் இப்பேரணிகள் மூலம் அரசாங்கம் சட்டபூர்வமான நடவடிக்கைகள் எடுப்பதற்கு இட்டுச் செல்லப் பட வேண்டும் என்று தான் எதிர் பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.

அதாவது இனிமேலாவது அமெரிக்காவில் டிரம்பின் அரச நிர்வாகத்தில் உள்ள கொள்கை வகுப்பாளர்கள் இப்பேரணிகளின் நோக்கம் குறித்துக் கவனம் செலுத்த வேண்டும் என அடம்ஸ் வலியுறுத்தியுள்ளார். கலிபோர்னியா மாநிலத்தைச் சேர்ந்த செனட்டரான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் ஆர்ப்பாட்டக் காரர்களுடன் உரையாற்றுகையில் ஓஹியோ, நியூயோர்க், ஃபுளோரிடா மற்றும் கலிஃபோர்னியாவிலும் எமது பேரணிகள் பரவ வேண்டும் என்றும் இவை புரட்சியாளர்களையும் கொள்கை வகுப்பாளர்களையும் ஈர்க்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

நீங்கள் வெள்ளை மாளிகையில் இல்லா விட்டாலும் அமெரிக்கக் காங்கிரஸ் உறுப்பினர் அல்லாவிட்டாலும் அல்லது பெரிய ஒரு தொழிலதிபராக இல்லா விட்டாலும் உங்கள் கையில் சக்தி உள்ளது என்பதை நம்புங்கள் என்று கமலா குறிப்பிட்டார். இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்து கொண்ட பல புரட்சியாளர்களும் பெண்ணிய ஆர்வலர்களும் கடந்த காலத்தில் மேற் கொண்டது போன்றே உத்வேகமாக இப்பேரணி இடம்பெற்றுள்ளதாகவும் வருங்காலத்திலும் எமது உரிமைக்காக நாம் ஒன்று கூடத் தயாராக இருப்பதாகவும் கருத்துத் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

0 Responses to டிரம்பின் அலுவலக முதல் நாளில் வாஷிங்டனை முற்றுகை இட்ட 1/2 மில்லியன் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக் காரர்கள்! : அடுத்தது என்ன?

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.

அதிகமாக வாசிக்கபட்டவை...