Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

செவ்வாய்க்கிழமை ஆப்கானிஸ்தான் பாராளுமன்றம் அருகே  தலிபான்கள் நடத்திய இரட்டைக் குண்டு வெடிப்புத் தாக்குதலில் 21 பேர் கொல்லப் பட்டதாகவும் 45 பேர் வரை படுகாயம் அடைந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

பாராளுமன்றக் கட்டடத்தில் இருந்து ஊழியர்கள் வெளியேறிக் கொண்டு இருந்த போது நிகழ்த்தப் பட்ட இந்தத் தாக்குதல்களுக்கு தலிபான் போராளிகள் உடனடியாகப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர்.

முதலாவது தற்கொலைக் குண்டுத் தாக்குதல் ஒரு தனிநபரால் பாராளுமன்ற வளாகத்துக்கு வெளியே நிகழ்த்தப் பட்டதாகவும் 2 ஆவது தாக்குதல் கார்க் குண்டுத் தாக்குதல் என்றும் கூறப்பட்டுள்ளது. கொல்லப் பட்டவர்களில் பெரும்பான்மையானவர்கள் பாராளுமன்ற ஊழியர்கள் அடங்கலாக பொது மக்கள் எனத் தனது பெயரை வெளியிட விரும்பாத பாதுகாப்பு அதிகாரி ஒருவர் AFP ஊடகத்துக்குத் தகவல் அளித்துள்ளார்.  சுகாதார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் அளித்த தகவலில் காயமடைந்த சுமார் 70 பேர் வைத்தியசாலைக்குக் கொண்டு வரப் பட்டதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

தலிபான் பேச்சாளரான ஷபிஹுல்லா முஜாஹிட் வெளியிட்ட அறிக்கையில் குண்டு வெடிப்புத் தாக்குதல்கள் ஆப்கானிஸ்தானின் பிரதான புலனாய்வு ஏஜன்ஸி வாகனம் ஒன்றைக் குறி வைத்தே நிகழ்த்தப் பட்டதாகத் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் அரசுக்கும் தலிபான்களுக்கும் இடையே சமாதான முயற்சிகளை சர்வதேசம் மேற்கொண்டு வரும் நிலையில் தலிபான்கள் இது போன்ற தாக்குதல்களை நிகழ்த்தி வருவது குறிப்பிடத்தக்கது. தெற்கு ஹெல்மாண்ட் மாகாணத்தின் தலைநகரான லஷ்கர் காஹ் என்ற இடத்தில் செவ்வாய்க்கிழமை காலை தற்கொலைக் குண்டுதாரி ஒருவர் நடத்தியிருந்த இன்னொரு தாக்குதலில் 7 பொது மக்கள் கொல்லப் பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆப்கானிஸ்தானில் அல்கொய்தாவுடன் இணைந்து போரிட்டு வரும் தலிபான் போராளிகளை சமாளிக்க அந்நாட்டு பாதுகாப்புப் படையினருக்கு உதவும் பணியில் அங்கு இன்னமும் 10 000 அமெரிக்க துருப்புக்கள் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

ஹெல்மாண்ட் மாகாணத்துக்கு சுமார் 300 அமெரிக்க கடற்படை வீரர்களை அனுப்புவதென கடந்த வாரம் அமெரிக்கா எடுத்த முடிவை ஆப்கான் அரசு வரவேற்றிருந்தது. 2014 இல் தமது போராட்டம் முடியும் வரை இந்த மாகாணத்தில் தான் அமெரிக்கத் துருப்புக்கள் கடும் போரை மேற்கொண்டு வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to ஆப்கானிஸ்தான் பாராளுமன்றம் அருகே தலிபான்களின் இரட்டை குண்டு வெடிப்புத் தாக்குதல் : 21 பேர் பலி

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...