Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

திங்கட்கிழமை கிர்கிஸ்தானின் பிரதான விமான நிலையத்துக்கு அண்மையில் கடும் பனி மூட்டத்துக்கு மத்தியில் தரையிறங்க முற்பட்ட  துருக்கி நாட்டைச் சேர்ந்த கார்கோ விமானம் ஒன்று கிராமப் பகுதியிலுள்ள குடியிருப்புக்களில் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது.

சுமார் 37 பேரைப் பலி கொண்ட இந்த விமானத்தின் விபத்துக்கு விமான ஓட்டியின் தவறே காரணம் என அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த கார்கோ விமானம் ஹாங்கொங்கில் இருந்து இஸ்தான்புல்லுக்கு கிர்கிஸ்தான் வழியாகச் சென்று கொண்டிருந்த போதே இந்த விபத்து நேர்ந்துள்ளது. இதில் 4 விமான ஓட்டுனர்களும் பலியானதுடன் விமானம் வீழ்ந்த இடத்தில் 15 வீடுகள் சேதமடைந்ததாகவும் பல கார்கள் நசுங்கிப் போனதாகவும் கூறப்படுகின்றது. மேலும் மீட்புப் பணிகள் விரைந்து நடைபெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொல்லப் பட்டவர்களில் பெருமளவானவர்கள் குடியிருப்புக்களில் உறங்கிக் கொண்டிருந்த பொது மக்கள் என்று கூறப்படுகின்றது.

கிர்கிஸ்தானின் மனாஸ் விமான நிலையத்தில் இறங்க முயன்ற குறித்த விமானம் கடும் பனி மூட்டத்தினாலும் பார்க்க முடியாத போதும் விமானியின் தவறான முடிவினாலும் காலை 7.31 அளவில் குடியிருப்புக்களுடன் மோதி விபத்தில் சிக்கியுள்ளது. ஆரம்பத்தில் தமது பகுதியில் நிலநடுக்கம் ஏதும் ஏற்பட்டதோ என்று அஞ்சிய குடிமக்கள் வெளியே பெய்து கொண்டிருந்த கடும் பனிக்கு மத்தியில் வீடுகளை விட்டு வெளியேறி திகைப்படைந்து நின்றதாகக் கூறப்படுகின்றது.

இதேவேளை செவ்வாய்க்கிழமை கிர்கிஸ்தான் இந்த விபத்தில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கான தேசிய தினம் என அந்நாட்டு அதிபர் அல்மஷ்பெக் அட்டம்பயேவ் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to 37 பேரைப் பலி கொண்ட துருக்கி கார்கோ விமான விபத்துக்கு பைலட் தவறே காரணம் என கிர்கிஸ்தான் குற்றச்சாட்டு!

Post a Comment

Followers