Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் புதுவருடத் தினத்தன்று 39 பேர் கொல்லப் பட்ட தீவிரவாதத் தாக்குதலுக்கு ISIS அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது. இஸ்தான்புல்லின் ரெய்னா என்ற இரவு விடுதியில்  நத்தார் தாத்தா வேடத்தில் உள் நுழைந்த தீவிரவாதி அங்கிருந்தவர்கள் மீது மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 39 பேர் கொல்லப் பட்டதுடன் 70 பேர் வரை படுகாயம் அடைந்தனர்.

கொல்லப் பட்டவர்களில் 16 பேர் வெளிநாட்டவர்கள் ஆவர். துருக்கியின் அமைதியைக் குலைப்பதற்காகவே இவ்வாறான தாக்குதல்களைத் தீவிரவாதிகள் திட்டமிட்டு நடத்துகின்றனர் என அந்நாட்டு அரசு குற்றம் சாட்டியுள்ளது. இந்நிலையில் டுவிட்டரில் ISIS அமைப்பு தமது இயக்கத்தைச் சேர்ந்த போராளியே இத்தாக்குதலை நடத்தியவர் எனத் தகவல் வெளியிட்டுள்ளது. தற்போது சிசிடிவி கேமராக்களில் பதிவாகி உள்ள வீடியோ படி அடையாளம் காணப்பட்டுள்ள தாக்குதல் தாரியைத் தேடும் பணியை துருக்கி காவற் துறை முடுக்கி விட்டுள்ளது.

கொல்லப் பட்ட வெளிநாட்டவர்களில் இருவர் இந்தியர்கள் எனத் தெரிய வந்துள்ளது. 2017 ஆம் ஆண்டு பிறந்த பின்னர் சுமார் 75 நிமிடங்கள் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் நீடித்ததாகக் கூறப்படுகின்றது. நூற்றுக் கணக்கான மக்கள் ISIS மற்றும் குர்து  போராளிகளின் வன்முறையால் கொல்லப் பட்டிருப்பதால் இந்த ஆண்டு இரத்தக்கறை படிந்த ஆண்டாகத் துருக்கிக்கு மாறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to புதுவருடத் தினத்தில் 39 பேர் கொல்லப் பட்ட துருக்கி தாக்குதலுக்கு ISIS பொறுப்பேற்பு

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...