Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

‘சண்டே லீடர்’ பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான லசந்த விக்ரமதுங்கவின் 8ஆம் ஆண்டு நினைவுதினம் இன்று ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 08) அனுஷ்டிக்கப்படுகின்றது.

அவர் படுகொலை செய்யப்பட்டு இன்றோடு எட்டு ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், அவரது படுகொலையோடு சம்பந்தப்பட்ட யாரும் இன்னமும் நீதி மன்றத்தினால் தண்டிக்கப்பட்டவில்லை.

பொரளை பொது மயானத்தில் அமைந்துள்ள லசந்த விக்ரமதுங்கவின் சமாதிக்கு அருகாமையில் சற்று முன்னர் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன. இதில், அமைச்சர்கள், செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

2009ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி கல்கிசை அத்திட்டிய பிரதேசத்தில் வைத்து மோட்டார் சைக்கிளில் வந்தவர்களினால் லசந்த விக்ரமதுங்க சுட்டுப்படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

0 Responses to லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்டு இன்றோடு 8 ஆண்டுகள் நிறைவு; நீதி கிடைத்தபாடில்லை!

Post a Comment

Followers