Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அமெரிக்காவின் புதிய பாதுகாப்புச் செயலாளர் பதவிக்கு டொனால்ட் டிரம்ப் இனால் நிர்ணயிக்கப் பட்ட ஜேம்ஸ் மத்தீஸ் உறுதிப் படுத்தப் படும் பட்சத்தில் பாகிஸ்தான் தனது நாட்டில் இயங்கி வரும் தீவிரவாதக் குழுக்களை முற்றிலும் ஒழித்துக் கட்ட வேண்டும் என ஊடகப் பேட்டியின் போது தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவும் அதன் செயற்பாடுகளுக்குத் தடையாகவும் பாகிஸ்தானின் எல்லைப் பகுதிகளில் இயங்கி வரும் தீவிரவாதக் குழுக்களை ஒழித்துக் கட்ட வேண்டிய உதவியைச் செய்வதற்குத் தான் மாநிலத் திணைக்களம் மற்றும் காங்கிரஸின் ஒப்புதலுடன் செயலாற்றத் தயாராக இருப்பதாகவும் ஜேம்ஸ் மத்தீஸ் தெரிவித்துள்ளார். 66 வயதாகும் ஜேம்ஸ் மத்தீஸ் 2013 ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற அமெரிக்கக் கடற்படை அதிகாரி ஆவார். இவர் அண்மையில் பாகிஸ்தானுக்கான அமெரிக்காவின் உதவி குறித்து ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்திருந்தார்.

இதன்போது அவர் ஆப்கான் தலிபான்களின் வன்முறையால் பாகிஸ்தான் மிகக் கடினமான பாடங்களைப் பெற்று வந்துள்ளது என்றார். இதனால் பாகிஸ்தான் முக்கியமாக தலிபான்கள் மற்றும் ஹக்கானி வலையமைப்பை எதிர்த்து கடுமையான நடவடிக்கை எடுப்பது அவசியம் என்றும் கூறினார். அல்கொய்தாவுடன் தொடர்புடைய ஹக்கானி நெட்வேர்க் ஆப்கானில் மேற்குலக மற்றும் இந்தியாவுக்கு எதிரான தாக்குதல்களின் பின்னணியில் இருந்து வந்துள்ளது. மேலும் பாகிஸ்தான் மண்ணில் தலிபான்கள் மற்றும் இதர தீவிரவாதக் குழுக்கள் சுதந்திரமாக நுழைந்து செயற்பட முடிவது ஆப்கான் பாதுகாப்புப் படைக்கும் மிகப் பெரிய தலைவலியாக இருந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

0 Responses to தீவிரவாத குழுக்களைப் பாகிஸ்தான் ஒழிக்க வேண்டும் : அமெரிக்காவின் புதிய பாதுகாப்புச் செயலாளராகவுள்ள ஜேம்ஸ் மத்தீஸ்

Post a Comment

Followers