Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சென்னை மெரினா கடற்கரையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போராட்டக்காரர்களை காவற்துறை அகற்றத் தொடங்கியது. அதிகாலை முதலே காவற்துறை உயரதிகாரிகள் உட்பட பல்லாயிரக்க கணக்கான காவலர்கள் மெரினாவில் குவிந்துள்ளார்கள்.

போராட்டத்தின் நோக்கம் நிறைவேறியுள்ளதால், கன்னியமான முறையில் கலைந்து செல்லுமாறு ஒலிபெருக்கி மூலம் வேண்டுகோள் விடுத்த காவற்துறையினர் படிப்படியாகப் போராட்டகாரர்களை அப்புறப்படுத்தத் தொடங்கியுள்ளார்கள். கடற்கரையின் மணற்பகுதிகளில் துயின்றுகொண்டிருந்த போராட்டக் காரர்களையும் அவர்கள் எழுப்பி கலைந்துசெல்ல வலியுறுத்தினார்கள். போராட்டக்காரர்கள் ஒலிபெருக்கி பாவிப்பதனையும் தடுத்தார்கள்.

போராட்டக்களத்தின் மத்திய பகுதியில் கலைந்து செல்ல மறுத்துக் குழுமிய போராட்டக் காரர்களின் மத்தியில் மயிலாப்பூர் காவற்துறை இணை ஆணையர் பாலகிருஷ்ணன், தற்போதைய நிலைகுறித்தும், அரசின் நிலைப்பாடுகுறித்தும், இதுவரையில் ஏற்படுத்தப்பட்டுள்ள அவசரச்சட்டம் குறித்தும் விரிவாக உரையாற்றினார். இந்தச் சட்டம் உருவானதே இப்போராட்டத்தின் வெற்றி எனக் குறிப்பிட்டவர், இந்தப் போராட்டத்தின் வெற்றியை மகிழ்ச்சியாக உணர்ந்து கலைந்து செல்ல வேண்டுகின்றோம் எனக் குறிப்பிட்டார். காவற்துறையினர் எவ்விதமான வன்முறையும் பாவிக்கமாட்டார்கள் நீங்களாகவே கலைந்து செல்லுங்கள் எனவும் குறிப்பிட்டார். போராட்டக்காரர்கள் மீது எந்த வன்முறையும் பாவிக்கப்படக் கூடாது என்ற கண்டிப்பான உத்தரவினையம் உயரதிகாரிகள் காவலர்களுக்கு வெளிப்படையாகவே அறிவித்தார்கள்.

கலைந்து செல்ல மறுப்பவர்களை காவற்துறையினர் கட்டாயமாக வெளியேற்றுகிறார்கள். காவலர்களின் நடவடிக்கையிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக போராட்க்காரர்கள் தேசிய கீதம் பாடுகின்றார்கள். இளம்பெண்கள் கண்ணீர்விட்டுக் கதறியழுகின்றார்கள். போராட்டக்காரர்களினால் நிறைந்திருந்த மெரினா தற்போது காவற்துறையினரால் நிறைந்திருக்கிறது. சுமார் 5000 போலிசார் குவிக்கப்பட்டுள்ளதாகவும் அறிய வருகிறது.

போராடியவர்கள் கோரிய அரைநாள் அவகாசம் காவற்துறையால் மறுக்கப்பட்டுள்ளது. போராட்டத்திலீடுபட்டவர்களில் ஒரு பகுதியினர் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில் எஞ்சியவர்கள் கடலருகே மனிதசங்கிலியாகப் பிணைத்துக்கொண்டு நின்றுவருகின்றார்கள்.

திண்டுக்கல், தேனியில் போராட்டம் வாபஸ். கோவை, திருச்சியில் பேச்சு வார்த்தை நடைபெறுகிறது. மதுரையில் போராட்டம் தொடர்கிறது.

0 Responses to சென்னை மெரினாவில் அறவழிப் போராளிகளை அகற்றத் தொடங்கியது காவற்துறை

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...