Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

“பொதுபலசேனா உடைந்து போய்விட்டது. கீழே விழுந்து விட்டோம். மீண்டும் எவ்வாறு எழுவது என்பது தொடர்பில் குழப்பமடைந்துள்ளோம்.” என்று அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

பொதுபலசேனவை ஆரம்பிக்கும் போது இருந்த பலர் தம்மை கைவிட்டு சென்று விட்டார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நுகேகொடையில் நேற்று சனிக்கிழமை மாலை நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போதே ஞானசார தேரர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “எமது போராட்டத் தோழர்கள் பலர் எம்மை விட்டு பிரிந்து சென்று விட்டார்கள். அவர்கள் மேலும் சின்னஞ் சிறிய கடைகள் பலவற்றை போட்டுக் கொண்டுள்ளனர். ஐக்கிய தேசிய கட்சிக்காரர்களுக்கு பொதுபலசேனாவை அழிக்கும் தேவை காணப்பட்டது. ஜே.வி.பி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சிக்கும் அதே தேவை காணப்பட்டது.

யாருடன் இணைந்து செயற்படுவது எவ்வாறு தேசிய வேலைத் திட்டமொன்றை முன்னெடுப்பது என்பதில் எமக்கு பிரச்சினை உள்ளது. விழுந்த இடத்திலிருந்து எவ்வாறு எழுவது என்பது தொடர்பில் குழப்ப நிலையிலேயே நாம் இருக்கின்றோம். சிங்கள பௌத்தர்கள் நாட்டை ஆட்சி செய்வதாக தென்பட்டாலும் உண்மை நிலைமை அதுவல்ல. அதுவே இன்று நாட்டின் பிரதான பிரச்சினையாக அமைந்துள்ளது. ” என்றுள்ளார்.

0 Responses to பொதுபலசேனா குழப்பமடைந்து நடுத்தெருவில் நிற்கின்றது; ஞானசார தேரர் கவலை!

Post a Comment

Followers