Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நாட்டின் ஆட்சியை சோதிடத்தினால் ஒருபோதும் மாற்ற முடியாது என்று அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அம்பாந்தோட்டை வீரகெட்டிய பகுதியில் உதாகம்மான வேலைத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் நேற்று திங்கட்கிழமை கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளதாவது, “சனிப்பெயர்சி என தெரிவித்து எதிர்வரும் 27ஆம் திகதி நுகேகொடையில் கூட்டு எதிரணியினர் (மஹிந்த அணி) அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். எனினும், கூட்டு எதிரணியினருக்கு சாதகமான நாள் என்பதனாலேயே, குறித்த தினத்தில் இந்த ஆர்ப்பாட்ட பேரணியை ஏற்பாடு செய்துள்ளனர். சோதிடத்தை நம்பியே கூட்டு எதிரணியினர் கடந்த ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்தனர்.

சோதிடத்தினால் கிரக மாற்றம் ஏற்படவுள்ளதாகவும், இதன் பிரகாரம் சனி பெயர்ச்சி எதிர்வரும் 27ஆம் திகதி ஏற்படவுள்ளதாகவும் சோதிடம் அறிவித்துள்ளது. எனவேதான், ஆடசி மாற்றம் செய்வதற்கான அடித்தளத்தை எதிர்வரும் 27ஆம் திகதி ஆரம்பித்தால் சிறப்பாக இருக்கும் என சோதிடர் ஒருவர் கூறியதை நம்பி கூட்டு எதிரணியினர் இந்த ஆர்ப்பாட்டப் பேரணியை ஏற்பாடு செய்துள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த ஜனாதிபதி தேர்தலில் சோதிடரை நம்பியே தோல்வியை சந்தித்தார். எதிர்வரும் 27ஆம் திகதி கூட்டு எதிரணியிருக்கு இருக்கும் பலம் கூட இல்லாமல் போகலாம்.

சோதிடர்கள் சிலர் தமது சுய இலாபத்துக்காக ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று பொய் வார்த்தைகளை கூறி வருகின்றனர். இவை மக்களை திசை திருப்ப செய்யும் கூட்டு எதிரணியின் உத்தியாகும். எதிர்வரும் 27ஆம் திகதி நுகேகொடையில் இடம்பெறும் பொதுக்கூட்டத்திற்கு "திருடர்களுடன் ஒன்று கூடுவோம்" என பெயர் மாற்ற வேண்டும். அதுதான் பொருத்தமாக இருக்கும்.” என்றுள்ளார்.

0 Responses to சோதிடத்தினால் ஆட்சியை மாற்ற முடியாது: சஜித் பிரேமதாச

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...