Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

யாழ்ப்பாணம் ஊர்காவற்துறையில் படுகொலை செய்யப்பட்ட குடும்ப பெண் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டாரா? என்பது தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

சம்பவ இடத்தில் நடத்திய முதற்கட்ட விசாரணையினை அடுத்து ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் வை.எம்.ரியாழ் மேற்கண்டவாறு உத்தரவிட்டிருந்தார்.

ஊர்காவற்துறை சுருவில் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தனித்திருந்த 7 மாத கர்ப்பிணி நேற்று முன்தினம் கொலை செய்யப்பட்டிருந்தார்.

இந்தநிலையில் குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட நீதவான் ஊர்காவற்துறை பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த சடலத்தினை பார்வையிட்டிருந்ததார்.

இதன் பின்னர் குறித்த பிரதேசத்திற்கு சென்றும் பார்வையிட்டதுடன், தகவல்களையும் சேகரித்தார்.

மேலும், இவ்வாறு விசாரணைகளை முடித்த நீதிபதி கொலை செய்யப்பட்ட பெண் பாலியல் ரீதியில் துன்புறுத்தப்பட்டாரா என்பது தொடர்பில் அறிக்கை தருமாறு உத்தரவிட்டுள்ளார்.

0 Responses to ஊர்காவற்துறை பெண் படுகொலை - உடல் ரீதியில் துன்புறுத்தப்பட்டாரா??

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...