Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வெளிவந்துள்ள க.பொ.த உயர்தர பெறுபேறுகளில் கிளிநொச்சி மாவட்டத்தில் விஞ்ஞானப் பிரிவில் வட்டக்கச்சி மகா வித்தியாலமும், கணிதப் பிரிவில் கிளிநொச்சி மத்திய கல்லூரியும், வணிக்கப் பிரிவில் சென்திரேசா பெண்கள் கல்லூரியும், கலைப்பிரிவில் கிளிநொச்சி மகா வித்தியாலயமும், தொழிநுட்ப பிரிவில் கிளிநொச்சி இந்துக் கல்லூரியும் மாவட்ட மட்டத்தில் முதலிடத்தை பெற்றுக்கொண்டுள்ளன.

கிளிநொச்சி வட்டக்கச்சி மகாவித்தியாலய மாணவி காசிலிங்கம் தனுசா இரண்டு ஏ,பி பெறுபேறுகளை பெற்று மாவட்ட மட்டத்தில் முதலாம் நிலையை பெற்றுள்ளார். இதேவேளை கிளிநொச்சி மகா வித்தியாலய மாணவி சிம்மேந்திரன் சஜீபா இரண்டு ஏ,பி பேறுகளை பெற்று இரண்டாம் நிலையையும் இராமமூர்த்தி செந்தீபன் இரண்டு ஏ,பி பெறுபேறுகளை பெற்று மூன்றாம் நிலையையும் பெற்றுள்ளார்கள்.

கணிதப் பிரிவில் கிளிநொச்சி மத்திய கல்லூரி மாணவர்களான சந்திரகேசரன் சோபனபிரியன், 3ஏ பெறுபேறுகளை பெற்று முதலாம் நிலையையும், நாகேந்திரன் கேசவராஜ் இரண்டு ஏ,பி பெறுபேறுகளை பெற்று இரண்டாம் நிலையையும், கிளிநொச்சி மகாவித்தியாலய மாணவி சௌந்தரராஜா யோகதர்மினி ஏ, இரண்டு பி பெறுபேறுகளை பெற்று மூன்றாம் நிலையையும் பெற்றுள்ளார்.

உயிரியல் தொழிநுட்ப பிரிவில் கிளிநொச்சி இந்துக் கல்லூரி மாணவன் மகேந்திரன் தார்த்திக்கரன் ஏ,இரண்டு பி பெறுபேறுகளை பெற்று மாவட்டத்தில் முதல் நிலையையும் கிளிநொச்சி தர்மபுரம் மத்திய கல்லூரி தர்மகுலபாலசிங்கம் டிலோஜன் மூன்று பி பெறுபேறுகளை பெற்று இரண்டாம் நிலையையும் கிளிநொச்சி இந்துக் கல்லூரி மாணவி சிவகுமாரன் தர்சிகா இரண்டு பி,சி பெறுபேறுகளை பெற்று மாவட்ட மட்டத்தில் மூன்றாம் நிலையையும் பெற்றுள்ளனர்.

வணிகப்பிரிவில் கிளிநொச்சி சென்திரேசா பெண்கள் கல்லூரி மாணவி கந்தசாமி டிலக்சிகா மூன்று ஏ பெறுபேறுகளை பெற்று முதல் நிலையிலும், பளை மத்திய கல்லூரி மாணவி அண்ணாவிப்பிள்ளை ஆன்நிலக்சனா மூன்று ஏ பெறுபேறுகளை பெற்று மூன்றாம் நிலையினையும், கலைப்பிரிவில் கிளிநொச்சி மகா வித்தியாலய மாணவன் இரவீந்திரன் துவாகரன் மூன்று ஏ பெறுபேறுகளை பெற்று மாவட்ட மட்டத்தில் முதல் நிலையையும் பெற்றுள்ளனா்.

செங்கலடி மத்திய கல்லூரி மாணவி மாவட்டத்தில் 5 வது இடத்தில்..

இன்று 07-01-2017 காலை வெளியான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின் படி மட்டக்களப்பு மாவட்ட மட்டத்தில் கல்குடா கல்வி வலயத்திலுள்ள செங்கலடி மத்திய கல்லூரி பாடசாலையின் மாணவி “வடிவேல் வசந்தலா” கலைத்துரையில் மூன்று ஏ சித்திகளைப்பெற்று மாவட்டத்தில் ஐந்தாவது இடத்தினைப் பெற்றுள்ளார். மேலும் “வடிவேல் வசந்தலா” தனது சிறந்த பெறுபேற்றுக்கு உறுதுணையாகஇருந்த அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துள்ளார்.

மன்னார் மாவட்டத்தில் சாதனை படைத்த மாணவன்

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் வர்த்தக பிரிவில் பரீட்சைக்கு தோற்றிய மாணவன் ரி.குருதயராஜ் அதிதிறமை சித்திகளை பெற்றுள்ளார்.

ரி.குருதயராஜ் 3 ஏ சித்தியை பெற்று வர்த்தக துறையில் மன்னார் மாவட்டத்தில் முதல் இடத்தினைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

இவர் மாவட்ட மட்டத்தில் முதலாவது நிலையை பெற்று தான் கல்வி கற்ற மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலைக்கும், மன்னார் மண்ணுக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

தனது எதிர்கால இலட்சியமாக பல்கலைக்கழகம் சென்று பட்டதாரியானாலும், சுயமான தொழில் ஒன்றையே செய்ய விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

0 Responses to கிளிநொச்சி மாவட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவர்கள்

Post a Comment

Followers